சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி அவர் பேச்சை இந்தியா கேட்கட்டும்.. மாற்றுத்திறனாளி ரஞ்சித்துக்கு கமல்ஹாசன் பாராட்டு!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாள் ரஞ்சித்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    IAS Exam-ல் சாதித்த மாற்றுத்திறனாளி Ranjith | Motivational Story | Oneindia Tamil

    யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வுகளின் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகின. இந்த தேர்வில் நாடு முழுவதும் எழுதிய 761 பேர் வென்றுள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த 36 பேர் தேர்வாகியுள்ள நிலையில் கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் தேர்வாகியுள்ளார். கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் அமிர்தவள்ளி தம்பதியின் மகன்தான் ரஞ்சித்.

    என்ன மனுசன்யா.. நோட் பண்ணுங்க தோனி.. சிஎஸ்கே வீரர்களை உருக வைத்த உத்தப்பா.. நெகிழ்ச்சி சம்பவம்!என்ன மனுசன்யா.. நோட் பண்ணுங்க தோனி.. சிஎஸ்கே வீரர்களை உருக வைத்த உத்தப்பா.. நெகிழ்ச்சி சம்பவம்!

    காது கேளாத ரஞ்சித்

    காது கேளாத ரஞ்சித்

    இவருக்கு பிறவியிலேயே செவித் திறன் குறைபாடு உள்ளது. அது போல் பேச்சுத் திறன் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் படித்தார். 12 ஆம் வகுப்பில் காது கேளாதோருக்கான பிரிவில் ரஞ்சித் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து 2016 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

    நிராகரிப்பு

    நிராகரிப்பு


    பின்னர் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்த அவர் யூபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 750 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்து ரஞ்சித் கூறுகையில் யூபிஎஸ்சி தேர்வை நான் தமிழில் எழுதினேன். மொழி எனக்கு தடையாக இருந்ததில்லை. கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் எனக்கு காது கேட்கவில்லை என்பதை காரணம் காட்டி எனக்கு வேலை கொடுக்காமல் நிராகரித்தனர்.

    முதல்வர் பாராட்டு

    முதல்வர் பாராட்டு

    இதனால் தற்போது யூபிஎஸ்சி தேர்வில் வென்றுள்ளேன் என்றார். இவரது வெற்றியை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டி வருகிறார்கள். மன வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம், காது கேட்காதது ஒரு குறையில்லை என்பதை மாற்றுத்திறனாளிகளுக்கு ரஞ்சித் உணர்த்தியுள்ளார்.

    கமல்ஹாசன் ட்விட்டர்

    கமல்ஹாசன் ட்விட்டர்

    அது போல் ரஞ்சித்துக்கு, கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறுகையில் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் கோவை ரஞ்சித். பேசும், கேட்கும் திறன்கள் இல்லாத சவாலை வென்ற அவர் தேர்வு வெற்றியிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். இனி அவர் பேச்சை இந்தியா கேட்கட்டும். மனமாரப் பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.

    English summary
    MNM Kamal Haasan praises PWD candidate Ranjith who passed in UPSC exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X