சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கொரோனா பணி வழங்குவது ஏன்?.. கமல் கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அனுப்பது ஏன் என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகள் எனும் பெயரில் "Street Warriors" (தெரு போராளிகள்) ஆக அந்நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களை நேர்காணல் செய்து தகவல்களை சேகரிக்கும் பணிகளுக்கும், அந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு Tele Counselling முறையில் தகவல் சேகரிப்பதற்கும் கல்வித்துறை அலுவலர்கள் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருகின்றனர்.

இணை இயக்குனர் காணொலி காட்சி மூலம் ஆஜராக சென்னை ஹைகோர்ட் உத்தரவுஇணை இயக்குனர் காணொலி காட்சி மூலம் ஆஜராக சென்னை ஹைகோர்ட் உத்தரவு

ஆசிரியர்களுக்கு மெமோ

ஆசிரியர்களுக்கு மெமோ

மேலும் அப்பணியை செய்ய மறுக்கும் ஆசிரியர்களுக்கு மெமோ கொடுப்போம் என்று பள்ளி மிரட்டும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளின் மிரட்டலால் வேறு வழியின்றி அப்பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு கையுறை, முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கொரோனா நோய் தடுப்பு உடைகள் கூட வழங்காமல் அப்பணியில் ஈடுபடுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பெருந்தொற்று

பெருந்தொற்று

கொரோனா நோய் பெருந்தொற்று தடுப்பு பணிகளில் பல்வேறு தன்னார்வலர்கள் சிறப்பு ஊதியத்துடன் பணியமர்த்தப்படும் போது மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியமோ, பயணப்படிகளோ வழங்காததும், கையுறை, முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கொரோனா நோய் தடுப்பு உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அவர்களின் சொந்த செலவில் வாங்கி கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்வதும் ஏற்புடையதல்ல.

புதைகுழி

புதைகுழி

தற்போது கொரோனா தொற்று கடுமையாகி வரும் சூழலில் "Street Warriors" (தெரு போராளிகள்) எனும் பெயரில் கொரோனா நோய் தாக்கியவர்களிடம் அவர்களின் உடல்நலம் குறித்து நேரடியாக விசாரித்து பதிவு செய்திட எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்காமல் அவர்களை பணி செய்ய சொல்வது ஆசிரியர்களை தெரிந்தே புதைகுழியில் தள்ளுவதற்கு சமமாகும்.

உரிய நடவடிக்கை

உரிய நடவடிக்கை

மேலும் "Street Warriors" (தெரு போராளிகள்) ஆக பணி செய்த ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினரும் சரியான சிகிச்சை கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். அவ்வாறு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை அவர்களுக்கு வழங்கிடவும் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மநீம அணி

மநீம அணி

அத்துடன் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பணி செய்ய நிர்பந்தம் செய்யும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தன்னார்வத்தோடு பணியாற்றிட விரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை அரசின் செலவில் வழங்கிடவும், அப்பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியத்துடன் கூடிய பயணப்படிகளும் வழங்கிட தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் வலியுறுத்துகிறோம் என்றார்.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan questions about street warriors who are inducted in Corona duty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X