சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் தீர்ப்பை நம்பிக் கொண்டிருக்கிறேன்.. கமல் எதை சொல்கிறார்?

Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் தீர்ப்புக்கு என்றும் தலை வணங்குவது என் வழக்கம். அதை நம்பிக் கொண்டிருக்கிறேன். இன்றும் நம்புவேன் என நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த கருத்தை இவர் தேர்தல் முடிவுகளை மனதில் வைத்துக் கொண்டு பேசியதாகவே தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டன. தற்போது 5ஆவது சீசன் தொடங்கி 20 நாட்கள் ஓடிவிட்டன.

தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்! தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!

இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதையும் அவர் பேசும் அரசியலை கேட்பதற்காகவும் நிறைய பேர் வார இறுதி நாட்களில் மட்டுமே பிக்பாஸ் பார்க்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

போட்டியாளர்

போட்டியாளர்

அப்படித்தான் நேற்றைய தினமும் எவிக்ஷன் செய்யப்பட்ட போட்டியாளரை அறிவிக்கும் போதும் கமல் அரசியல் பேசினார். கமலிடம் எவிக்ஷன் கார்டை பார்வையாளர்களில் ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார். அதை பிரித்து பார்ப்பதற்கு முன்னர் அபிஷேக் , சின்னப்பொண்ணு ஆகிய இருவரில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை மக்கள் தீர்ப்பாக அளித்திருக்கிறார்கள்.

தலை வணங்குதல்

தலை வணங்குதல்

மக்கள் தீர்ப்புக்கு என்றும் தலை வணங்குவது என் வழக்கம். அதை நம்பிக் கொண்டிருக்கிறேன். இன்றும் நம்புவேன் என்று பேசியபடியே கார்டை பிரித்து பார்த்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன். கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை அள்ளியது மக்கள் நீதி மய்யம். இதையடுத்து சட்டசபைத் தேர்தலில் வாக்கு சதவீதம் கடுமையாக சரிந்தது. பின்னர் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அந்த அளவுக்கு கமல் கட்சி சோபிக்கவில்லை. ஒரு சில கட்சிகள் மக்கள் தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என குறை கூறி வரும் நிலையில் கமல்ஹாசன் மக்கள் தீர்ப்பை ஏற்பதாக பிக்பாஸில் கூறியது தேர்தல் முடிவுகளையும் சேர்த்துதான் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இதே போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் எந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார். அதே போல் கமல்ஹாசனும் மக்களை குறை சொல்லாமல் தேர்தலிலும் விளையாட்டிலும் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் தீர்ப்பை நம்பிக் கொண்டிருக்கிறேன் என கமல் கூறியது இனி வரும் தேர்தல்களிலாவது மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பை அளிப்பார்கள் என கமல்ஹாசன் நம்புகிறார். இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Kamal Haasan says in Biggboss that he is accepting what people voted in Eviction process.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X