சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கதறும் காளியப்பன் தங்கை.. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு நியாயம் வேண்டும்: கமல்ஹாசன் ஆவேச வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு நியாயம் வேண்டும் - கமல்ஹாசன்-வீடியோ

    சென்னை: நான் டிவியை மாற்றிவிட்டேன், உங்கள் கோபத்தால் நீங்கள் மாற்ற வேண்டியவர்களை மாற்றினால், இந்த நாடே மாறிவிடும் என கூறி ஒரு அதிரடி வீடியோவை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

    சூலூர் சட்டசபை இடைத் தேர்தலையொட்டி கமல்ஹாசனுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்த நிலையில், "நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி. இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண...." என்ற முன்னுரையோடு ஒரு வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

    எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை! எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை!

    ஓட்டப்பிடாரம்

    ஓட்டப்பிடாரம்

    ஓட்டப்பிடாரம் சென்றிருந்தபோது, காளியப்பன் என்பவர் வீட்டுக்கு சென்றேன். கடந்த வருடம், மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் நடைபெற்ற மறுநாள், சம்பள பணம் வாங்கச் சென்றபோது தெருவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டவர்தான் காளியப்பன். இவ்வாறு கமல்ஹாசன் பேசியதும், காளியப்பனின் தங்கை கதறி அழும் வீடியோ அதில் இடம் பெற்றுள்ளது. தனக்கு அண்ணன் இல்லை என்றும், பொள்ளாச்சி அயோக்கியர்களை கொல்லாமல், எங்கள் அண்ணனை குருவி மாதிரி சுட்டு கொன்றுவிட்டார்கள் என்றும் அந்த பெண் கதறி அழுகிறார்.

    ஓட்டுப் பிச்சை

    இதையடுத்து பேச்சை தொடர்கிறார் கமல்ஹாசன். அந்த பொண்ணு கேட்டதில் என்னங்க தப்பு இருக்கு. அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த கலவரத்திற்கு அடிக்கல் நாட்டியவர்கள், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள், சம்பவமே நடக்காத மாதிரி, மறுபடியும், அதே தொகுதிகளுக்கு சென்று ஓட்டுப் பிச்சை கேட்டு வெட்கமில்லாமல் திரிகிறார்கள். வரும் இடைத் தேர்தலில் இந்த சுயநல அரசியல்வாதிகளை தூக்கி எறிந்துவிட்டு மாற்றத்திற்கு தயாராகுங்கள்.

    புதிய டிவி

    புதிய டிவி

    மே 23ம் தேதி, மாண்ட அந்த இளைஞனின் நினைவு நாளாக மட்டுமல்ல, அதற்கு காரணமானவர்களை நமது நினைவில் இருந்தே அகற்றும் நாளாக மாறட்டும். இவ்வாறு பேசுகிறார் கமல்ஹாசன். இறுதியில், எனது கோபத்தினால் உடந்தை அந்த டிவியை புதிதாக மாற்றிவிட்டேன். உங்கள் கோபத்தினால் நீங்கள் மாற்ற வேண்டியவர்களை மாற்றினால் இந்த நாடே மாறிவிடும். இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

    அது என்ன புது டிவி

    அது என்ன புது டிவி

    சில வாரங்கள் முன்பு கமல் வெளியிட்ட ட்விட்டர் வீடியோவில், ஸ்டாலின், எச்.ராஜா உள்ளிட்டோர் டிவியில் பேசும் தேர்தல் பிரச்சார பேச்சுக்களை கேட்டு டார்ச்சை எடுத்து, டிவியை உடைப்பது போன்ற காட்சியில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இந்த நிலையில், இப்போது புதிய டிவியை வாங்கிவிட்டதாக கமல் கிண்டலாக கூறும் வகையில், இந்த விளம்பர காட்சி இடம் பெற்றுள்ளது.

    English summary
    Makkal Needhi Maiam chief Kamal Haasan has relesed a video on by election in which he showed Tuticorin sterlite protest and shot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X