சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிச்சையெடுக்கும் தோழருக்கு ரூ 20 லட்சம் கோடி உதவுமா.. அவரிடம் ஆதார் இருக்கு.. #தாங்குமாதமிழகம் வைரல்

Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசன் பயன்படுத்திய #தாங்குமாதமிழகம் ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து முன்னேற்றம் அடைந்து முதலிடத்திற்கு முன்னேறுவதற்கு பதிலாக கொரோனா பாதிப்பில் 8 ஆம் இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு எட்டி பிடித்துவிட்டதாக கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் காசுக்கு ஆசைப்பட்டு டாஸ்மாக்கை மீண்டும் திறக்க அரசு வாதாடி வருகிறது என கூறிய அவர், #தாங்குமாதமிழகம் என ஹேஷ்டேக்குடன் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது அவர் பயன்படுத்திய ஹேஷ்டேக் டிரென்டிங்கில் இருந்து வருகிறது.

அச்சமூட்டும் டாஸ்மாக் கிளஸ்டர்.. குடிமகன்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியதா? உண்மை பின்னணி என்ன?அச்சமூட்டும் டாஸ்மாக் கிளஸ்டர்.. குடிமகன்கள் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியதா? உண்மை பின்னணி என்ன?

 மதுக்கடைகள்

மதுக்கடைகள்

பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதுதான் அம்மாவின் அரசு? என்கிறார் இந்த வலைஞர்.

பெருமை

பெருமை

அப்பாக்கள் மற்றும் அண்ணன்கள் என இரு தலைமுறையை மதுவுக்கு அடிமை ஆக்கிய பெருமை இரு திராவிட கட்சிகளையே சாரும். எண்ணற்ற இளம் விதவைகள் #தாங்குமாதமிழகம்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பால் இல்லாமல் குழந்தை அழுதுக் கொண்டிருக்கும் போது பிரிட்ஜில் மதுபாட்டில்களை தந்தை அடுக்கி வைக்கும் புகைப்படத்தை போட்டு இந்த நிலைமை அனைவருக்கும் வந்திடக் கூடாதுனு தான் போராடுகிறார் கமல்ஹாசன் என்கிறார் இந்த வலைஞர்.

 20 லட்சம் கோடி தேவையா

20 லட்சம் கோடி தேவையா

என் வீட்டுவாசலில் சோறும் தங்க இடமும் இல்லாமல் பிச்சை எடுக்கும் நம் தோழருக்கு இந்த 20 லட்சம் கோடி உதவுமா?

முன் குறிப்பு : அவர் இடம் ஆதார் கார்டு இருக்கிறது !

டீ

டீ

ரூ 5000-த்தை பெற்று கொண்டு வாக்களிக்கும் மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியாளர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் கொடுத்த 5000 பணத்தை 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒரு நாளைக்கு ரூ 3 மட்டுமே கிடைக்கும். அந்த 3 ரூபாயில் ஒரு சிங்கிள் டீக்கூட வாங்க முடியாது.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan's Thaanguma Tamilagam hashtag goes viral in social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X