சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியை விமர்சிப்பதை நகைச்சுவையாக பார்க்க முடியாது.. கோமாளி டிரைலர் பார்த்து வருந்திய கமல்

Google Oneindia Tamil News

சென்னை: கோமாளி டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சனம் செய்துள்ளதை நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என கமல்ஹாசன் வேதனை தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக உறுதியளித்தார். ஆனால் அவர் இதுவரை கட்சியை தொடங்கவில்லை. இவர் கூறியதன் பிறகு கமல்ஹாசனே கட்சி தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் ரஜினி இன்னும் கட்சி தொடங்காதது குறித்து சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். இதனால் ரஜினி ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் அவ்வப்போது வார்த்தை போர் நடக்கும்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில் கோமாளி என்ற படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியானது. இதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி விமர்சனம் இடம் பெற்றுள்ளது. இந்த படம் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி, அதன் பாதிப்புகள் குறித்து நகைச்சுவையாக இந்த படம் விவரிக்கிறது.

டிரைலர்

டிரைலர்

இதில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இது இவரது 24ஆவது படமாகும். இதை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

இதில் கோமாவால் பாதிக்கப்பட்ட நபராக ஜெயம் ரவி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பதை டிவியில் செய்தியாக பார்க்கும் ஜெயம் ரவி, இது 96-ஆவது வருஷம். யாரை ஏமாற்றுகிறீங்க என கூறுகிறார்.

டுவிட்டர்

இதை பார்த்த கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

English summary
Kamal Haasan objects and asked to remove the scence which teases Rajinikanth's political entry in Jayam Ravi's Komali movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X