சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய நிதிநிலையை காத்தவன் சிறுதொழில் செய்பவனே.. மறந்தால் பதவியிழப்பர்.. கமல்ஹாசன் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் 21 நாட்கள் லாக்டவுன் ஆன நிலையில் பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

Kamal Haasan says about 21 days lock down

இந்த நிலையில் தமிழகத்தில் 144 தடையுத்தரவும் மாவட்ட எல்லை மூடலும் நேற்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனவே 21 நாட்களுக்கு மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.
அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம் என தெரிவித்தார்.

English summary
Makkal Needhi Maiam's President Kamal Haasan says about 21 days lock down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X