சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜேஎன்யு மாணவர்கள் மீதான அராஜகம்.. நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ்ந்து விடுமோ?.. கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு என சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் கூறுகையில் நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் இருப்பதாக நீண்ட காலமாக கூறுகின்றனர். அது இட்லி விலை போல் தான்.

Kamal Haasan says about Citizenship amendment act

திறமை தான் விலையை கூட்டுகிறது. மக்கள் பாராட்டால் தான் அதிகரிக்கிறது. முதன் முதலில் ரூ.250 சம்பளத்திற்கு வந்தேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு.

இதுபோல் தான் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர். பின்னர் அதை பின் வாங்க வேண்டிய நிலையில் அதில் மாறுதல்கள் செய்யப்பட்டன. சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது அல்ல. மக்களுக்காக செய்யப்படுவது தான்.

என்னை தாக்கி கொல்ல பார்த்தனர்.. ஆனால் போலீஸ் என்னையே குற்றவாளி என்கிறது.. பொங்கும் ஐஷே கோஷ்! என்னை தாக்கி கொல்ல பார்த்தனர்.. ஆனால் போலீஸ் என்னையே குற்றவாளி என்கிறது.. பொங்கும் ஐஷே கோஷ்!

தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது. இவை காலங்காலமாக நடந்து வருகிறது. அதுபோல் மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்.

டெல்லியில் ஜே.என்.யு. மாணவர்கள் மீதான அராஜகம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுபோன்றவை நடந்துக் கொண்டு இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ என்றார்.

English summary
Makkal Needhi Maiam president Kamal Haasan says about Citizenship amendment act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X