சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்ல சோறு சாப்பிட்டவர்கள் இன்று.. டெல்டா வேதனை குறித்து கமல் குமுறல்

Google Oneindia Tamil News

சென்னை: நல்ல சோறு சாப்பிட்டவர்கள் இன்று அரசின் புழுத்து போன அரிசியை சாப்பிடுகிறார்கள் என கமல்ஹாசன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் குறித்து வேதனை தெரிவித்தார்.

புயல் பாதித்த பகுதிகளான நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாப்பநாடு, நீர்முலை, பட்டுக்கோட்டை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார் இந்நிலையில் அவர் அந்த மக்களின் வேதனையை டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு "நல்ல சோறு" போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் "புழுத்துப்போன அரிசியை" சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

தவணை

தவணை

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

ஆழ்ந்து விடக் கூடாது

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் "கிராம நிர்வாக அதிகாரிகள்" கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், "வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது".

முகாம்கள்

முகாம்கள்

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவிற்கான சோகம்

இந்தியாவிற்கான சோகம்

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

முழு சிகிச்சை எப்போது

முழு சிகிச்சை எப்போது

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது "முதலுதவி" மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும் என்று கமல் அடுத்தடுத்த டுவீட்களில் தெரிவித்துள்ளார்.

English summary
Kamal haasan who visited Gaja affected areas for second time says that the people who produces and gives quality rice to us, now eats Government's worst rice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X