சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அமைச்சரவையில் இடமில்லைன்னா.. தமிழகத்திற்கு வாய்ப்பில்லைன்னு அர்த்தம்.. கமல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal not called for Modi oath | பதவியேற்பு விழாவுக்கு நாங்க கமலை அழைக்கவில்லை: பாஜக- வீடியோ

    சென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் இல்லை என்பது வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தமிழகத்தில் இந்த கூட்டணிகளில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் தவிர்த்து வேறு யாரும் வெற்றி பெறவில்லை.

    Kamal Haasan says about no place in cabinet for Tamilnadu

    இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் அல்லது வைத்திலிங்கம் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் ரவீந்திரநாத் குமாருக்குத்தான் அதிக வாய்ப்பு என கூறப்பட்டது.

    ஆனால் விழா முடிவடையும் தமிழகத்துக்கான வாய்ப்பை பார்த்து பார்த்து கண்கள் பூத்ததுதான் மிச்சம் என்ற அளவுக்கு ஆனது. எனினும் தமிழகத்தில் ஒரு கூட்டணி கட்சிக்கு கூட அமைச்சரவையில் பாஜக இடமளிக்கவில்லை. இதுகுறித்து திருச்சி செல்லும் போது கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் இல்லை என்பது வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது . தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கை யாகும் என்றார்.

    தமிழகத்தில் உள்ள திமுக- காங்கிரஸ் எம்பிக்கள் காதறுந்த ஊசிகள்.. வெளிநடப்புதான் செய்யலாம்.. தமிழிசை! தமிழகத்தில் உள்ள திமுக- காங்கிரஸ் எம்பிக்கள் காதறுந்த ஊசிகள்.. வெளிநடப்புதான் செய்யலாம்.. தமிழிசை!

    கூட்டணி கட்சிகளுக்குக் கூட அமைச்சரவையில் இடம் தராமல் சொந்த கட்சியான இல கணேசன், தமிழிசை ஆகியோருக்கு இடம் அளித்திருக்கலாம் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருந்தார்.

    English summary
    Kamal Haasan says that no place for Tamilnadu in Modi cabinet shows that there is no opportunity for Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X