சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த்துடன் கூட்டணியா.. கமல்ஹாசன் பளிச் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருடனும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    திராவிட கட்சிகளை மீறி உங்களால் ஜெயிக்க முடியுமா.. பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. கமல்ஹாசன் செம பதில்

    மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி 3 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இன்று மூத்த பத்திரிக்கையாளர்களுடன், கமல்ஹாசன் கலந்துரையாடினார். சென்னை தி.நகரிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

    அப்போது, பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும், கமல்ஹாசன் பதிலளித்தார். ரஜினிகாந்த்துடனான கூட்டணி குறித்த பேச்சுக்களும் அப்போது வந்தது.

    திராவிட கட்சிகளை மீறி உங்களால் ஜெயிக்க முடியுமா.. பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. கமல்ஹாசன் செம பதில்திராவிட கட்சிகளை மீறி உங்களால் ஜெயிக்க முடியுமா.. பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. கமல்ஹாசன் செம பதில்

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    இதற்கு பதிலளித்து கமல்ஹாசன் கூறுகையில், மக்கள் நீதி மய்யம் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை. பேச்சுவார்த்தையில் எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து கூட்டணி அமையும். ரஜினியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

    வரவேற்பு

    வரவேற்பு

    சமீபத்தில் டெல்லி கலவரம் குறித்து ரஜினிகாந்த் பேட்டியளித்தார். இதற்கு டுவிட்டரில் கமல் வரவேற்பு அளித்தார். அப்படி வழிக்கு வாங்க என அவர் கூறியிருந்தார். அந்த டுவிட்டை வைத்து பார்க்கும்போது, ரஜினியும், கமலும் இணைந்து தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இப்போது கமல்ஹாசன் பேட்டி அதை சூசகமாக கூறுகிறது.

    கூட்டணிக்கு வாய்ப்பு

    கூட்டணிக்கு வாய்ப்பு

    ரஜினிகாந்த், நேரடியாக முதல்வராகும் விருப்பம் கொண்டவர். கமல்ஹாசன் முதல்வர் பதவியைவிடவும், நல்லாட்சி என்ற தத்துவத்தின் மீது மட்டும் நம்பிக்கை கொண்டவர். எனவே, இருவர் நடுவே கூட்டணி உருவாக பெரிய தடை இருக்க முடியாது. இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இணையும் வாய்ப்பு உள்ளது.

    ரசிகர்கள் கருத்து

    ரசிகர்கள் கருத்து

    இதில் ஒரு சிக்கல். கமல் மற்றும் ரஜினி இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் ஏழாம் பொருத்தம். அவர்கள் இதை எப்படி எடுப்பார்கள், ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பதுதான் அடுத்த கேள்வியாக உள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில், இரண்டு பேரும் கூட்டணி வைக்க வேண்டாம் என இருவர் ரசிகர்களுமே கூறி வருகிறார்கள். இதற்கான பதில், அடுத்தடுத்த நாட்களில்தான் தெரிய வரும்.

    English summary
    Actor turned politician Kamal Haasan says he is ready to make alliance with Rajinikanth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X