• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆதரவு கோரி ரஜினியை சந்திக்க தேவையில்லை.. அந்த அறிக்கை மூலம் வாய்ஸ் கொடுத்துட்டாரு.. கமல்

|

சென்னை: நல்லவர்களுடன் வல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம். மன்றத்தினருக்கு ரஜினி அண்மையில் வெளியிட்ட அறிக்கையே போதுமானது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

  நடிகர் ரஜினி வெளியிட்ட அறிக்கையே போதுமானது.. மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி - வீடியோ

  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கமல்ஹாசன் பேசுகையில் வணக்கம், நேரில் வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் சற்று விலகியே இருக்க வேண்டும்.

  ஜனநாயகத்தின் பள்ளங்கள் கடை கோடி மனிதனுக்கும் செல்ல வேண்டும். அதற்கு மக்களாட்சியும் மக்களின் நேரடி பங்களிப்பும் இருக்க வேண்டும். இதைத்தான் காந்தி கிராம சுயராஜ்ஜியம் என்கிறார். காந்தி மட்டும் அல்ல இரண்டாம் தலைமுறையான ராஜீவ் காந்தியும் அதை தெரிவித்திருக்கிறார்.

  பிரதிநிதி

  பிரதிநிதி

  இந்தியாவில் தோராயமாக 5000 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு பிரதிநிதிகளாவார்கள். ஆனால் உள்ளாட்சியில் 500 பேருக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையில் பரவல் நிர்வாக முறை உறுதிப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றமும் சட்டமன்றமும் சட்டத்தை நிறைவேற்றலாம். ஆனால் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவது உள்ளாட்சி அமைப்பின் கையில்தான் உள்ளது.

  அந்தஸ்து

  அந்தஸ்து

  உள்ளாட்சி அமைப்புகளை கிராம பஞ்சாயத்துகளை மேலும் மேலும் வலுப்படுத்துவது ஒன்றே நாட்டின் வளர்ச்சிக்கும் ஜனநாயகம் வலுபடவும் வழிவகுக்கும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அந்தஸ்தையும் அதிகாரத்தையும் வழங்கக் கூடிய எங்கள் செயல்திட்டங்களை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சட்ட பஞ்சாயத்து இயக்கம் நல்லாட்சிக்காக 8 ஆண்டுகளாக களத்தில் இருந்து பாடுபட்டு வரும் இயக்கமாகும்.

  தேர்தல் அறிக்கை

  தேர்தல் அறிக்கை

  மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பே சட்ட பஞ்சாயத்துடனான என் உறவு தொடங்கிவிட்டது. கிராம சபைகளின் முக்கியத்துவம், அதிகாரம் பற்றி தமிழகம் விழிப்புணர்வு கொண்டிருக்கிறது என்றால் மக்கள் நீதி மய்யமும் சட்ட பஞ்சாயத்து இயக்கமும் கைகோர்த்து களம் கண்டதுதான் காரணம். அந்த இயக்கத்தினருடன் இணைந்து 2021 சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை தயார் செய்வதில் மக்கள் நீதி மய்யம் பெருமை கொள்கிறது.

  கவுன்சிலர்கள்

  கவுன்சிலர்கள்

  இதில் மிக முக்கியமானது பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு ஊதியம் அளிப்பதுதான். அதை தரும காரியம் என செய்யும் பட்சத்தில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஊதியம் பெற்று வேலை செய்பவர்களுக்கு கேள்விக்கு ஆளாவார்கள், பதில் சொல்லவும் தயாராக இருப்பார்கள். சட்டசபை தேர்தலின் போது உள்ளாட்சி தேர்தல் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன என கேட்கிறீர்கள்.

  புரிதல்

  புரிதல்

  சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தலும் வர வாய்ப்பிருப்பதால் அதை பற்றிய புரிதலை மக்களுக்கும் அதில் பங்கேற்போருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக பேசியதுதான் இது. சீரமைப்பை தமிழகத்தை என்ற ஒன்றின் அம்சமாக சீரமைப்போம் உள்ளாட்சியை என்பதும் இருக்கும். எங்களுடைய நகர்வுகள் முழுவதும் மக்களை நோக்கி இருக்கும். அதில் கூட வருகிறவர்கள் அதற்கான தகுதிகளுடன் வைத்துக் கொள்வோம்.

  அரசியல்

  அரசியல்

  நல்லவர்களுடன் கூட்டணி என நான் சொல்லிவிட்டேன். நல்லவர்கள் அரசியலில் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து கேட்கிறீர்கள். அதற்கு ரஜினியின் அறிவிப்பே போதுமானது. என் மன்ற தொண்டர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என அவரது குரல் எங்களுக்கு போதுமானதுதான். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

  கிராம சபை கூட்டங்கள்

  கிராம சபை கூட்டங்கள்

  காங்கிரஸ் கட்சி எங்களை கூட்டணி அழைக்கிறது. அக்கட்சியின் அன்பை மதிக்கும் நாங்கள், கூட்டணிக்கு பதில் கூறும் நேரம் இதுவல்ல என கூற கடமைப்பட்டுள்ளோம். அரசு என்பது சட்டம் அல்ல, சட்டத்தை இயற்றுபவர்கள்தான். அவர்கள் மக்களுக்காக வளைந்து கொடுக்கும் அவ்வப்போது கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடலாம் என்றார் கமல்ஹாசன்.

   
   
   
  English summary
  Makkal Needhi Maiam President Kamal Haasan says that about asking support from Rajinikanth.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X