சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- கமல் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வரும் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.

14 வருட கட்டுமானம்.. 154 மீட்டர் உயர கோபுரம்.. டெல்லியில் திறக்கப்படும் அசத்தல் சிக்னேச்சர் பாலம்! 14 வருட கட்டுமானம்.. 154 மீட்டர் உயர கோபுரம்.. டெல்லியில் திறக்கப்படும் அசத்தல் சிக்னேச்சர் பாலம்!

ஈடுபட வேண்டும்

ஈடுபட வேண்டும்

அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்ததானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் கமல்.

தொழில்

தொழில்

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ், கேரளாவுக்கு விற்பனைக்கு துணிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். சமீபத்தில் கேரளா வெள்ளத்தால் பெரும் அவதிக்குள்ளான தங்கராஜ், 12-ம் வகுப்பு படித்து வந்த மகள் தமிழரசிக்கும், 11-ம் வகுப்பு படித்து வந்த மகள் வைஷ்ணவிக்கும் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் காரணமாக, இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தினர்.

செய்தி

மாணவிகள் இருவரும் யோகா, பேச்சுப்போட்டி, விளையாட்டு என்று பல துறைகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று இருந்ததாக செய்தி வெளியானது.

அறிவுரை

மாணவிகள் படிப்பை நிறுத்திய தகவலறிந்த கமல் ஹாசன், இருவரையும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி வழங்கியதோடு, படிப்பை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

ஊரணி

கமலின் வேண்டுகோளுக்கேற்ப, இன்று காலை அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் சாலையில் நல்லதங்காள் ஊரணியை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுத்தம் செய்தனர்.

English summary
Kamal Haasan requests his fans and party activists that instead of celebrating birthday they can do welfare projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X