சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை- கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் குடியுரிமை சட்டத்திற்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர திட்டமிடுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரம் இல்லை. இது போன்ற கொடுங்கோன்மை அடங்கும் வரை எனது போராட்டம் ஓயாது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை.. அமித்ஷா உறுதி.. நமது அம்மா தகவல் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை.. அமித்ஷா உறுதி.. நமது அம்மா தகவல்

ட்விட்டர்

ட்விட்டர்

ஆவணங்கள் அடிப்படையில் ஒருவரின் முன்னோரை நிர்ணயம் செய்வது தவறு. அதே ஆவணங்களின் அடிப்படையில் அவர்களை நீக்குவதும் தவறான செயலாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

திமுக அழைப்பு

திமுக அழைப்பு

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்திய தோழமை கட்சிக் கூட்டத்திலும் கமல்ஹாசன், ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 23-ஆம் தேதி திமுக நடத்தும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனை நேரில் சந்தித்து திமுக அழைப்பு விடுத்தது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

இந்த பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிகிச்சைக்காக கமல்ஹாசன் வெளிநாடு சென்றுவிட்டதால் திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Kamal Haasan in his twitter High time, they realise that majority in Parliament doesn’t give them authority to destroy the fabric of my nation. After CAA, their next brainchild is NRC. You cannot deny one’s ancestry based on documentary evidence or lack of it. My fight won’t stop till this tyranny goes off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X