சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிழையில்லாத அரசியலமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும் மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம்.. கமல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Hassan | Makkal Needhi Maiam Press Release | CAB

    சென்னை: பிழையில்லாத அரசியலமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும் மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம் என குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

    இதில் இந்து, கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

    மு.க. ஸ்டாலினா.. டாக்டர் ராமதாஸா.. செம குழப்பத்தில் ராயபுரம் மனோ.. காங்கிரஸுக்கு எப்ப கல்தா? மு.க. ஸ்டாலினா.. டாக்டர் ராமதாஸா.. செம குழப்பத்தில் ராயபுரம் மனோ.. காங்கிரஸுக்கு எப்ப கல்தா?

    மக்களாட்சிக்கு செய்யும் துரோகம்

    மக்களாட்சிக்கு செய்யும் துரோகம்

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கையில் கூறுகையில் அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால் பிழை இல்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும் மக்களாட்சிக்கும் செய்யும் துரோகமே.

    அறுவை சிகிச்சை

    அறுவை சிகிச்சை

    நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்திற்கு நிகரானது இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை. காந்தியின் 150ஆவது பிறந்தநாளை அவர் மறைவு நாளாக மாற்றிவிட்டால் அவர் கனவு கண்ட இந்தியா உருத்தெரியாமல் அழிந்துவிடுமா என்ன?

    பிதா மஹாக்கள்

    பிதா மஹாக்கள்

    முயன்று தோற்றவர், மீண்டும் முயல்கின்றனர். இது "பாமர இந்தியாவல்ல" உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க. "இளம் இந்தியா" விரைந்து இது போன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய்நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதா மஹாக்களுக்கு இது புரிய வேண்டும்.

    அதில் கொஞ்சம்

    மய்யத்தின் வாதம், "இதில் கொஞ்சம்" "அதில் கொஞ்சம்" கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதமல்ல. நமக்குப்பின்னும் நல்லதே நடக்க வித்திடும் சிந்தனைகளைப் பற்றித் தொடரும் பெருங்கூட்டம் நாம். அச்சிந்தனைகளை மய்யம் கொள்ளச் செய்யச் சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார் என கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Makkal Needhi Maiam President Kamal Haasan says that trying to make changes in constitution is betrayal to people and to democracy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X