சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு செருப்பு வந்துவிட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

ஒத்த செருப்பு திரைப்படத்தின் படவிழா இன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசினார். அவர் பேசுகையில் மகாத்மா காந்தியை நான் ஹீரோவாக நினைக்கிறேன். அத்தகைய காந்தி ஒரு முறை ரயிலில் சென்ற போது அவரது ஒத்தசெருப்பு கீழே விழுந்துவிட்டது.

வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார் செந்தில் பாலாஜி... அதிமுக புகார் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார் செந்தில் பாலாஜி... அதிமுக புகார்

ஒரு செருப்பு

ஒரு செருப்பு

இதையடுத்து ஒற்றை செருப்பை கொண்டு என்ன செய்வது என யோசித்த காந்தி தனது மற்றொரு செருப்பையும் வீசிவிட்டார். அது போல் என் மீது ஒரு செருப்பு வந்துவிழுந்துவிட்டது.

வீசிவிடுங்கள்

வீசிவிடுங்கள்

மற்றொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். ஒற்றை செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறார். விரைவில் அதையும் வீசிவிட்டால் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

தகுதியானவன் தகுதியானவன்

தகுதியானவன் தகுதியானவன்

வாழ்த்துகள் வளர்க்கும் அளவுக்கு தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது. என் மீது செருப்பு வீசியவருக்குத்தான் அவமானமே தவிர எனக்கு அவமானம் இல்லை. செருப்பு வந்து வீழ்வதற்கு தகுதியானவன் நான் என்றார் கமல்ஹாசன்.

தீவிரவாதி

தீவிரவாதி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முட்டை வீச்சு

முட்டை வீச்சு

இந்த நிலையில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது மர்ம நபர் செருப்பையும், முட்டையையும் வீசியது குறிப்பிடத்தக்கது.

English summary
Kamal Haasan says that Where is the another which was slapped on me in Karur. Iam waiting for that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X