சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த நிலைக்கு தள்ளிவிட்டார்களே.. திறனற்ற அரசு.. கமல்ஹாசன் அதிரடி தாக்குதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Bus Strike in Chennai : சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- வீடியோ

    சென்னை: சம்பளத்தை கூட போராடித்தான் பெற வேண்டும் என்கிற நிலைக்கு இந்த அரசு தள்ளியுள்ளது என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடுமையாக விளாசியுள்ளார்.

    ஜூன் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று திடீரென ஸ்ட்ரைக்கில் குதித்தனர். இதனால், சென்னை முழுக்க இன்று காலை பஸ் பயணிகள் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

    இதன்பிறகு, அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டதால் தொழிற்சங்கத்தினர் தங்களது ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.

    ட்வீட்

    இந்த நிலையில்தான், கமல்ஹாசன், இன்று மாலை ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில், மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற நிலைக்குத் தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசிற்கு, மக்களுக்காக, மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    சல்யூட்

    கமல் கருத்துக்கு ஆதரவு அளிப்பதை போல, அவரது ரசிகர்களும், கட்சியினரும், நெட்டிசன்களும் பின்னூட்டம் அளித்து வருகிறார்கள். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரின் சல்யூட் ஸ்டைலில் கமல் கருத்துக்கு வரவேற்பு தெரிவிக்கிறார் இந்த நெட்டிசன்.

    மக்களுக்கு பாதிப்பு

    ஆனால் இந்த நெட்டிசன் கொஞ்சம் வேற மாதிரி கருத்து சொல்கிறார். "ஒரு நாள் சம்பள தாமதத்துக்கு ஸ்ட்ரைக் செய்யும் சங்கத்தை மக்களுக்காக, மக்களுடன் இணைந்து கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்" என்கிறார் அவர்.

    கவிதை

    மக்களுக்காக, மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் ~ கவிதை மாதிரி இருக்குல??! என்று கமல் ட்வீட் பற்றி கருத்து சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன்.

    English summary
    Kamal Haasan slam Tamilnadu government for transfort employees strike on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X