சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல் அப்படி பேசி இருக்க கூடாது.. வலுக்கும் எதிர்ப்பு.. அட கடைசியில் பாஜகவும் களமிறங்கிடுச்சே!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேருந்துகளில் உரசுவது குறித்து பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Bigg Boss 3 Tamil:Promo 2:Checkmate for meera குறும் படம் போட்டு மீராவை அசிங்கப்படுத்திய கமல்

    சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேருந்துகளில் பெண்களை உரசுவது குறித்து பேசிய விஷயம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பிரபலம். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

    கட்சி தொடங்கி வேகமாக முக்கிய தலைவராக உருவெடுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். ஆனாலும் அவர் தொடர்ந்து எப்போதும் போல பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களை உரசுவது , தெரியாமல் தொடுவது குறித்து கமல்ஹாசன் கடந்த வாரம் பேசினார். அதில் பெண்களை சிலர் பேருந்தில் உரசுவார்கள். சிலர் தெரிந்து உரசுவார்கள். ஆனால் எல்லோரும் அப்படி அல்ல. கூட்டத்தில் சிலர் தெரியாமல், உரசிவிடுவார்கள். அவர்களை எல்லாம் குற்றம் சொல்ல முடியாது என்று கூறினார்.

    என்ன சரவணன்

    என்ன சரவணன்

    இதற்கு அங்கு பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் சரவணன் உடனே எழுந்து, நான் கல்லூரி காலத்தில் உரசி இருக்கிறேன் சார். பேருந்தில் நான் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கையை தூக்கினார். இதற்கு உடனே அங்கு இருந்த மக்கள் எல்லோரும் கை தட்டினார்கள். அதோடு கமல்ஹாசனும் சிரித்துக் கொண்டே நீங்கள் உண்மையை ஒப்புக்கொண்டீர்கள்.. அதையும் தாண்டி நீங்கள் புனிதமாகிவிட்டீர்கள் என்று பதில் அளித்தார்.

    சர்ச்சை

    சர்ச்சை

    இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. ஒரு பெண்ணை நான் உரசினேன் என்று வெட்கமே இல்லாமல் சரவணன் பேசுகிறார். அதற்கு கொஞ்சம் கூட கோபம் அடையாமல் கமல்ஹாசன் எப்படி சிரிக்கிறார் என்று பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் .

    சின்மயி என்ன சொன்னார்

    சின்மயி என்ன சொன்னார்

    பாடகர் சின்மயியும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இதை எல்லாம் ஒளிபரப்புவதே தவறு. அதற்கு மக்கள் தற்போது கைதட்டுகிறார்கள், விசில் அடித்து சிரிக்கிறார்கள். மோசம், என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பாஜக தலைவர்கள்

    பாஜக தலைவர்கள்

    இதற்கு தற்போது பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் செய்ததை ஏற்கவே முடியாது. சரவணன் பேசியதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியாக கமல்ஹாசன், சரவணனை மன்னிப்பு கேட்க சொல்லிருக்க வேண்டும். ஆனால் அவர் சரவணனை ஆதரிக்கும் விதத்தில் பேசியுள்ளார், என்று விமர்சனம் செய்துள்ளார்.

    English summary
    Kamal Haasan slammed by BJP leader for encouraging groping remark in Big Boss.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X