சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜக்கி வாசுதேவின் நதிகளை மீட்கும் திட்டத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு

Google Oneindia Tamil News

சென்னை: ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவின் நதிகளை மீட்கும் ரேலி பார் ரிவர்ஸ் திட்டத்தை ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஜக்கி வாசுதேவ் வனப்பகுதிகள், யானை வழித்தடங்களை அழித்து ஆசிரமங்களை கட்டி இருக்கிறார் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. அதை ஈஷா யோகா மையம் மறுத்து வருகிறது.

Kamal Haasan supports Isha foundations rally for rivers

அதேபோல் ஜக்கி வாசுதேவின் மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நதிகள் மீட்பு திட்டத்தை ஜக்கி வாசுதேவ் கையில் எடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் ஜக்கி வாசுதேவுடன் நதிகள் மீட்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. Rally for rivers என்ற தலைப்பிலான இந்த நதிகள் மீட்பு இயக்கத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலாசரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலா

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:

ஈஷா மையத்தின் நதிகள் மீட்பு முயற்சியை தத்துவம், மதம், அரசியல் ஆகியவற்றைக் கடந்து ஆதரிக்க வேண்டும். இத்திட்டம் அனைவருக்குமானது.

நமது உலகைக் காக்கும் முயற்சிதான் நதிகள் மீட்பு திட்டம். அதுவே இதை ஆதரிப்பதன் பின் இருக்கும் பகுத்தறிவு. ஜக்கிவாசுதேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது முயற்சிகள் வெற்றி பெறவும் வாழ்த்துகள்:

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

English summary
MNM President Kamal Haasan tweets' The rally for rivers initiative by Isha foundation should be supported overlooking Ideological,religious and political differences. The rationale is, it is a common cause, an endeavor to start saving our world. Happy birthday @SadhguruJV and all the luck for the rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X