சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

200 பேருக்கு மட்டும்தான் அனுமதியாம்... சுற்றுப் பயணத்தை கேன்சல் செய்துவிட்டேன்: கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: தமது சுற்றுப் பயணத்தில் 200 பேருக்குதான் அனுமதி என நிபந்தனை விதிக்கபட்டதால் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் ஒவ்வொரு நாளும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் விரவி கிடக்கின்றன. சென்னையில் திங்கள்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Kamal Haasan to meet Press today

இந்த ஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் வழக்கம் போல, அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று மட்டும் கூறி ஒதுங்கிக் கொண்டார்.

Kamal Haasan to meet Press today

இன்னொரு பக்கம் சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மநீமவில் இணைந்தார்.

கமல் கட்சியில் இணைந்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு - மநீம பொதுச்செயலாளராக நியமனம்கமல் கட்சியில் இணைந்தார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு - மநீம பொதுச்செயலாளராக நியமனம்

அவர் மநீம கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமது சுற்றுப் பயணத்தில் 200 பேருக்கு மட்டும்தான் அனுமதி கிடைத்தது. ஆகையால் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டேன் என்றார்.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan will meet Press today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X