சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Jacto Geo: போராட்டமும் முக்கியம்.. கல்வியும் முக்கியம்.. கமல்ஹாசன் அதிரடி கருத்து!

தேர்வு நெருங்கும் வேளையில் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை என்று ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தேர்வு நெருங்கும் வேளையில் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை என்று ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக தமிழக அரசில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடக்டைறது.

Kamal Haasan tweet on Jacto Geo protest

இந்த போராட்டத்திற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது டிவிட்டில், கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை.

பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்., என்று கூறியுள்ளார்.

English summary
Kamal Haasan takes safe stand on Jacto Geo protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X