சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு - கமல் சாடல்

ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது.

Google Oneindia Tamil News

சென்னை: கண்ணுக்கெட்டாத தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி 16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவதால் அதன் விலை தினசரி கூடுவதாகவே உள்ளது. இதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்வை சந்திக்கிறது.

Kamal Haasan tweets about LPG gas cylinder price hike

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்தது.

கடந்த 16ஆம் தேதி மீண்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 785 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் 1ம் தேதி 610 ரூபாயாக இருந்த இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்னையில் தற்போது ரூ.785 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் உயர்ந்துள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 810 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் சிலிண்டர் 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கமடைய வைத்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்ணுக்கெட்டாத தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது என்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

English summary
Kamal Haasan said cooking gas was flying alongside both petrol and diesel. Does the federal government think that no gas is needed to burn the stomachs of the poor? He said the fire was dangerous.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X