சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அது கிராமசபை கூட்டமா.. நமக்கு நாமே கூட்டமா பாஸ்.. உதயநிதியை பதிலுக்கு கழுவி ஊற்றிய கமல் பேன்ஸ்!

கிராமசபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கருத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் டிவீட் போட்டு வாங்கிக் கட்டி வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal- Stalin fight | திமுக - மநீம உறவு பாலம் திடீரென அறுந்தது ஏன்?

    சென்னை: கிராமசபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலுக்கு கமல் ரசிகர்களும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையேயான பிரச்சனை தற்போது பெரியதாகிக் கொண்டே வருகிறது. திமுக மீது திடீரென்று விமர்சனங்களை வைக்க தொடங்கி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

    கடந்த வாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைவது குறித்து கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்ததில் தொடங்கிய பிரச்சனை தற்போது பூதகரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

     என்ன பேசினார்

    என்ன பேசினார்

    நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ''கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை அமைப்பு இருப்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வளவு ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் என்னை போல சிறுவனை பாா்த்து கிராமசபைக் கூட்டங்களை நடத்துகிறீா்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?'' என்று மறைமுகமாக திமுக தலைவா் ஸ்டாலினை விமர்சித்து இருந்தார்.

    உதயநிதி கருத்து

    இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டில் ''கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்'' என்று கூறி இருக்கிறார்.

     வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இந்த டிவிட் காரணமாக தற்போது திமுகவினருக்கும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் டிவிட்டரில் நிகழ்ந்து வருகிறது. டிவிட்டர் இதனால் பெரிய போர்க்களம் போல மாறி வருகிறது.

     இதுதான் அதுவா?

    இதுதான் அதுவா?

    இவர் ''கிராமசபை நடத்த வேண்டிய நாட்கள் ஜனவரி 26, மே 1,ஆகஸ்டு 15,அக்டோபர் 2. இதுல ஒன்னாச்சு மேல இருக்க தேதியோட ஒத்துப்போதா'' என்று கேள்வி கேட்டுள்ளார்.

    மக்கள்கிட்ட கொண்டு சென்றவர்

    இவர் ''பட் இதை வெகு ஜனங்கள் கிட்ட கொண்டு போனவர் கமல் ....அவர் சொல்லாயிருக்கும் வரை இது தெரியாது ...எந்த கட்சியாக இருந்தாலும் கிராம சபை மூலம் நல்லது நடந்தால் நல்லது ...தொடரட்டும் .'' என்றுள்ளார்.

    நிறைய வேலை

    இவர் ''கமல் உங்களுக்கு நிறைய வேலை தராரு போல வெயிட் பண்ணுங்க அடுத்து என்ன தேட சொல்வாரோ'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    நமக்கு நாமே

    இவர் ''இது கிராம சபை கூட்டத்தில் அல்ல நமக்கு நாமே பயணத்தின் போது ஸ்டாலின் மக்களை சந்தித்தது. கமல் சொல்வது ''நான் முதன்முதலில் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டதை பார்த்து ஸ்டாலின் காப்பி அடிப்பதாக'' என்றுதான். ஸ்டாலின் இதற்கு முன் எந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.?'' என்று கேட்டுள்ளார்.

    25 வருடம்

    இவர் ''கமல் 25 வருசமா இருக்குனுதான் சொன்னாரு. நாந்தான் கண்டுபிடிச்சேன்னு சொல்லலை.'' என்று பதில் அளித்துள்ளார்.

    கமல் கண்டுபிடிச்சது

    இவர் ''கமல் கண்டு பிடித்ததல்ல கிராம சபை. அப்படி அவர் சொல்லியிருந்தால் அது தவறு. அதேபோல் கிராம சபை என்று ஒன்று இருப்பது கமல் சொன்ன பிறகுதான் பெரும்பான்மை மக்களுக்கு தெரியும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.'' என்று கூறி இருக்கிறார்.

    ஸ்டாலின் ஆதரவு

    இவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக ''அறிவாளி மேலே வெளியிட்டு இருக்கும் புகைப்படம் எல்லாம் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருக்கும்போது நடந்த கிராம சபை கூட்டத்தில் எடுத்தது..'' என்று டிவிட் செய்துள்ளார்.

    வேண்டுகோள்

    இவர் ''தி மு க விற்கு ஒரு வேண்டுகோள் ! ஒரு முறை மக்கள் நீதி மையம் ஆட்சி அமைக்க வழி விடுங்கள் ! தி மு க , அ தி மு க மாறி மாறி ஆட்சி அமைத்தது போதும். ஒரு முறை மாற்றத்தை பார்ப்போம் !'' என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

    ஆட்சி இல்லை

    இவர் ''ஆட்சியில் இருந்த போது ஒருமுறை ஒப்புக்கு சென்றுவிட்டு, 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது ஏன்?தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் கூடஇதுவரை ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை ஏன்? ஆட்சியில் இருந்தபோதும், தற்போதும்கூட பென்சன்கூட வாங்கித்தரமுடியவில்லையே ஏன்?'' என்று கிண்டலடித்து இருக்கிறார்.

    English summary
    Dear Kamal Haasan, This is for you tweets Udhayanidhi supporting his Dad M K Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X