சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இருவிஷயங்களை ஏற்றுக்கொள்கிறேன்.. பிரதமர் மோடியின் தொலைக்காட்சி பேச்சுக்கு கமல்ஹாசன் வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி பொருளதார நிவாரண திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், ஏழைகளுக்கு இதன் பலன் எப்படி போய் சேருகிறது என்பதை எதிர்பார்ப்பதாக கூறினார்.

நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்.

kamal haasan welcome pm modis economic package for country

அப்போது அவர் பேசும் போது , 17ம் தேதிக்கு பிறகு 4வது கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். எனினும் சென்ற முறை போல் இருக்காது என்றும் வேறுவிதமாக இருக்கும் என்றும் கூறினார். அத்துடன் ம் பொருளாதாரத்தை மீட்க ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார்.

kamal haasan welcome pm modis economic package for country

இதுகுறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களே.. உங்களின் இரு விஷயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். முதலாவது இந்த நெருக்கடியில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், இரண்டாவது தன்னம்பிக்கையுடன் இருப்பது எதிர்காலம். நீங்கள் அறிவித்துள்ள பொருளாதாரத் தொகுப்பை நான் வரவேற்கிறேன். அதேசமயம் எனது நாட்டின் ஏழ்மையானவர்கள் எவ்வாறு சரியான முறையில் இந்த பொருளாதார தொகுப்பை பெறுகிறார்கள் என்பதைப் பார்க்க அதன் விவரங்களை நான் கவனிப்பேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

Recommended Video

    Lockdown 4.0 மாநில அரசுகளிடம் யோசனை கேட்ட மோடி.. லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்?

    தமிழக அரசு மீண்டும் ரூ.1000 நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும்.. இதோ லிஸ்ட்தமிழக அரசு மீண்டும் ரூ.1000 நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும்.. இதோ லிஸ்ட்

    English summary
    kamal haasan welcome pm modi's economic package for country , he said that While we welcome the economic package, I will watch out for the details to see how the poorest of my country get their due atlast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X