சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷ்.. அப்படி வாங்க.. இந்த வழிநல்ல வழி.. மத்திய அரசை வெளுத்த ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்துகள்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லி வன்முறைகள் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    செய்தி தெரியுமா | 27-02-2020 | Oneindia tamil Morning news

    டெல்லியில் சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களை குறிவைத்து வன்முறை கும்பல் கொடூரமாக தாக்கியது. இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    Kamal Haasan welcomes Rajinikanth comments on Delhi violence

    இந்த கோர தாண்டவத்தில் இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக சென்னையில் நேற்று இரவு செய்தியாளர்களை போயஸ்கார்டனில் உள்ள தமது வீட்டுக்கு முன்பாக நடுத்தெருவில் சந்தித்தார் ரஜினிகாந்த்.

    டெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு- 106 பேர் கைதுடெல்லி வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு- 106 பேர் கைது

    அப்போது, மத்திய அரசை மிகவும் காட்டமாக விமர்சித்தார் ரஜினிகாந்த். மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும் ரஜினிகாந்த் சாடினார். இதுவரை பாஜக ஆதரவாளர் என கருதப்பட்ட ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு எதிராக சீறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில், சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள். என வரவேற்றுள்ளார்.

    English summary
    Makkal Neethi Maiyam President Kamal Haasan welcomed Actor Rajinikanth''s criticism against the Central on in failing to control the Delhi Violences.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X