• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கமல்ஹாசன் வீடு திரும்பினார் - வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். விரைந்து நலம்பெற வாழ்த்திய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கமல்ஹாசன் வீடு திரும்பினார் - வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கமல்ஹாசன் குணமடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசனிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

  டெல்லி வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் சோதனை.. 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்! டெல்லி வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் சோதனை.. 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

  கடந்த வாரம் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகவும், எனினும் சில நாட்களுக்குத் தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் கடந்த வாரம் ஒய்வில் இருந்த காரணத்தால் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

  உள்ளங்களுக்கு நன்றி

  உள்ளங்களுக்கு நன்றி

  இந்நிலையில் இன்று கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
  முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  கவனித்து கொண்டவர்களுக்கு நன்றி

  கவனித்து கொண்டவர்களுக்கு நன்றி

  மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ,மருத்துவ பணியாளர்களுக்கும் ,மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என் மகள்களுக்கும் ,ஊண் உறக்கமின்றி உடனிருந்து கவனித்துக் கொண்டே என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அனைவருக்கும் நன்றி

  அனைவருக்கும் நன்றி

  நான் விரைந்து நலம் பெற வேண்டும் என வாழ்த்திய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.

  உறவினர்களுக்கு நன்றி

  உறவினர்களுக்கு நன்றி

  என் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்பு சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ் ,சரத்குமார், ஸ்ரீபிரியா உள்ளிட்ட திரைத்துறை நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள். என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் திரைப்பட குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும் ,விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

  English summary
  Kamal Haasan, chairman of the Makkal Neethi Maiyam, said that he is recovering from corona infection. He thanked everyone who wished him for his speedy recovery.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X