சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் கமல்ஹாசன் பிரசாரம்.. 'உரிமைக்குரல் ஒலிக்கும்' என ட்வீட்!

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..! பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிந்து விட்டது. தி.மு..க, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

அ.தி.மு.க ஏற்கனவே பா.ஜ.க.வுடன் போட்டியிடும் இடங்களை இறுதி செய்து விட்டது. பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டது. ள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

நாளை முதல் பிரசாரம்

நாளை முதல் பிரசாரம்

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், 'வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கியக் கொள்கைகளுள் ஒன்று.இந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டிற்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மய்யம் தொடர்ந்து செயல்பட்டுவந்திருக்கிறது.

கமல்ஹாசன் பிரசாரம்

கமல்ஹாசன் பிரசாரம்

நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை தலைவர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார். மாற்றத்தின் பிரதிநிதிகளாக, மய்ய வேட்பாளர்கள் தமிழகமெங்கும் போட்டியிடுகிறார்கள்.உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மய்யத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல்கொடுப்பதற்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் "உள்ளாட்சி - உரிமைக்குரல்" முதற்கட்ட பரப்புரைப் பயணத்தை, நாளை (27.09.21) காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து துவங்குகிறார்.

உரிமைக்குரல்

உரிமைக்குரல்

30.09.21 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தைத் தொடர்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், ' உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை 'உள்ளாட்சி - உரிமைக்குரல்' நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும்' என்று கூறியுள்ளார்.

English summary
Kamal Haasan, chairman of the makkal needhi maiam will campaign from tomorrow in support of local body election candidates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X