சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வா மகளே வா.. புது யுகம் படைப்போம்.. ஜாதியை உதறிய சிநேகாவிற்கு கமல் வாழ்த்து

சாதி, மதம் இல்லாதவர் என சான்றிதழ் பெற்ற சிநேகாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சாதி, மதம் அற்றவர் என அரசின் சான்றிதழ் பெற்ற முதல் நபர்- வீடியோ

    சென்னை: "வா மகளே வா, புது யுகம் படைப்போம்" என்று எந்த சாதியும், மதமும் இல்லாதவர் என்ற அரசின் சான்றிதழ் பெற்ற சிநேகாவிற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர் கமல். பகுத்தறிவுவாதி என்று பலமுறை தன்னை பிரகடனப்படுத்தி கொண்டவர். போன வருடம் ஜுன் மாதம் கமல் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

    எனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை.. சர்ட்டிபிகேட் பெற்ற சினேகா.. குவிகிறது பாராட்டு எனக்கு எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை.. சர்ட்டிபிகேட் பெற்ற சினேகா.. குவிகிறது பாராட்டு

    அதில், "என் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் பதிவு செய்ய மறுத்துவிட்டேன். இப்படித்தான் சாதி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதால் சாதி மதத்தை பதிவுசெய்யவில்லை. ஒவ்வொரு தனிமனிதரும் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும். கேரள மாநிலம் இதைக் கடைபிடிக்கிறது. சாதி, மதத்தை பள்ளிச் சான்றிதழ்களில் குறிப்பிடாமல் இருப்பவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    எதிர் விமர்சனம்

    எதிர் விமர்சனம்

    கமலின் இந்த ட்வீட்டுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தாலும், சிலர் இதனை கடுமையாக எதிர்த்தனர். இது இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான பார்வை என்று பகிரங்கமான விமர்சனமும் அப்போது செய்யப்பட்டது.

    முறைப்படி சான்றிதழ்

    அன்றைக்கு கமல் சொன்னதைதான் இன்றைக்கு திருப்பத்தூர் சிநேகா முறைப்படி செய்து அரசின் சான்றிதழ் வாங்கி செய்து முடித்திருக்கிறார். சினேகாவின் இந்த முயற்சிக்கும், முடிவுக்கும் முதல் ஆளாக கமல் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொண்டுள்ளார். இது சம்பந்தமான ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

    நாளை நமதே

    நாளை நமதே

    அதில், "தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே. நிச்சயம் நமதே" என்று கமல் தெரிவித்துள்ளார்.

    கமல் பஞ்ச்

    கமல் பஞ்ச்

    இட ஒதுக்கீடு என்ற ஒரே ஒரு காரணத்தை முன் வைத்தே சாதி காலங்காலமாக வழிவகுக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமாக உள்ளது. அதனால்தான் "இனியும் அடம்பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம்" என்று இடித்து சொல்லி உள்ளார்... இதுதான் கமல் பஞ்ச்!!

    English summary
    MNM Leader Kamalhasan appreciates Thirupattur Sneha for "No caste No Religion Certificate"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X