சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'தமிழன்' என்று கூறி ஓட்டு கேட்காதீங்க.. சீமான் வருவதற்கான கதவை அடைத்து விட்டாரா கமல்?

சீமானை கமல்ஹாசன் மறைமுகமாக தாக்கி பேசினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீமான் வருவதற்கான கதவை அடைத்து விட்டாரா கமல்?- வீடியோ

    சென்னை: தமிழர், தமிழ் என்று பேசினால் மட்டும் மக்களாட்சியை கொடுத்துவிட மாட்டார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    வரும் தேர்தலில் தனித்து போட்டி என்று கமல்ஹாசன் அறிவித்தார். நல்லவர்கள் இணையலாம் என்று ஒரு இலவச வேண்டுகோளும் விடுத்தார். ஆனால் இதுவரை ஒருத்தரும் இணையவில்லை.

    அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிட போவதாக கூறியுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், ஆண்களுக்கு 20, பெண்களுக்கு 20 என்று வேட்பாளர்களை அவரே பிரித்து சொல்லி விட்டார்.

    "பாஜகவுடன் எப்படி கூட்டணி வைக்கலாம்.. அன்வர் ராஜா" அதிமுகவினரை விரட்டிய ஊர் மக்கள்!

    கமல் ஒரு தமிழர்

    கமல் ஒரு தமிழர்

    இதனிடையே கமல்ஹாசனும், சீமானும் தனித்து போட்டி என்பதைவிட ஏன் இருவரும் ஒன்றிணைய கூடாது என்ற எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது. இதற்கு காரணம், சீமானுக்கு ரஜினி அரசியல் என்றால் சுத்தமாக ஆகாது என்பதுடன், கமல் கட்சி ஆரம்பித்தபோதே ஆழ்வார்பேட்டைக்கே சென்று ஆதரவும் தெரிவித்துவிட்டு வந்தார். சீமானின் இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணம், கமல் ஒரு பச்சை தமிழன் என்பதால்தான்!

    கமல் ஜூனியர்

    கமல் ஜூனியர்

    ஆனால் அரசியலில் நாங்கள்தான் சீனியர், கமல் ஜூனியர் என்று ஈகோ பதிவு ஒன்றினை சீமான் வெளியிடவும் இவர்களுக்குள் கூட்டணி சாத்தியம் இருக்க வாய்ப்பில்லையோ என்றே நினைக்க தோன்றியது.

    இதுவும் வாரிசு அரசியல்தான்

    இதுவும் வாரிசு அரசியல்தான்

    இந்த நிலையில், கமல் நேற்று மகளிர் தின விழா ஒன்றில் பேசும்போது, 'தமிழன் என்பது எனது விலாசம். அதை வைத்துக்கொண்டு இங்கு தமிழன் என்று சொல்லி வாய்ப்பு கேட்க கூடாது. தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழன் என சொல்லி வாய்ப்பு கேட்பதும் குடும்ப அரசியல்தான். திறமையில்லாமல் தமிழனாக இருப்பவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியதில்லை. எங்கு, யாரை வைக்கிறீர்கள் என்பது முக்கியம்" என்றார்.

    கூட்டணி?

    கூட்டணி?

    தமிழ் தேசியம் பேசும் ஆட்களையே கமல் இப்படி விமர்சித்து பேசியதாக பார்க்கப்பட்டது. குறிப்பாக சீமானை மறைமுகமாக தாக்கி பேசியதாகவும் எடுத்துகொள்ளப்பட்டது. ஆக மொத்தம் சீமானுக்கான கூட்டணி கதவையும் கமல் இழுத்து அடைத்துவிட்டார்!

    English summary
    MNM Leader Kamalhasan attacks Naan Thamizhar Seeman indirectly in Chennai Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X