சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலிலும் லேட்டாக வேட்பாளர்களை அறிவிக்கும் கமல்

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தாமதமாகும் கமலின் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு

    சென்னை: அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்று சொன்ன கமல், வேட்பாளர்களை அறிவிப்பதிலும் தாமதம் காட்டி வருகிறார்.

    நடந்து முடிந்த தேர்தலில் தனித்துபோட்டி என்று தில்லாக சொல்லி களத்திலும் இறங்கினார் கமல். இதற்காக பார்த்து பார்த்து நேர்காணல் நடத்தினார். கமலின் வித்தியாசமான நேர்காணல் அதிகமாக பேசப்பட்டது. அதேபோல வேட்பாளர்கள் தேர்விலும் வித்தியாசம் தென்பட்டது!

    அது என்ன கமலுக்கு வந்த சோதனையா, திருஷ்டியா என தெரியவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதில் குளறுபடி, டைமிங் மிஸ் ஆனது என எல்லாம் சேர்ந்து 4 தொகுதிகளில் போட்டியிட முடியாமல் போய்விட்டது.

    பிரச்சார பயணம்

    பிரச்சார பயணம்

    ஆனால் இந்த முறை கமல் இடைத்தேர்தல்களையும் சந்திக்க போவதாக சொல்லிவிட்டார். அதற்காக பிரச்சார பயண லிஸ்ட்டை கூட வெளியிட்டு விட்டார், ஆனால் இன்னும் வேட்பாளர்கள் யார் என்றுதான் தெரியவில்லை.

    இன்று அறிவிப்பு?

    இன்று அறிவிப்பு?

    மற்ற கட்சிகள் எல்லாம் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் கமல் மட்டும் இன்னும் அறிவிக்காமல் உள்ளார். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

    மாவட்ட செயலாளர்கள்

    மாவட்ட செயலாளர்கள்

    விருப்பமனுகூட வாங்கவில்லை என்றாலும் நேரடியாக அதாவது கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெற்று, வேட்பாளர்கள் தேர்வு நடத்தப்பட்டதாக தகவல் கசிந்தது.

    கமல் பிரச்சாரம்

    கமல் பிரச்சாரம்

    எப்படி எம்பி தேர்தலுக்கு கமல் என்ற ஒற்றை மனிதன் சுற்றி சுற்றி 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தாரோ, அதேபோல இடைத்தேர்தல் நடக்க உள்ள 4 தொகுதிகளுக்கும் கமல் பிரச்சாரம் செய்ய போகிறார் என்பது அவரது பிரச்சார பயண திட்டத்திலேயே தெரிந்துவிட்டது!

    English summary
    Makkal Needhi Maiam Party candidates are likely to announce today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X