சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல்ஹாசனின் சம்மட்டி அடி கேள்விகள்.. "அம்மா"வின் அரசு என்ன செய்ய போகிறது

பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கமல் கடுமையாக சாடியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Pollachi Issue - பொள்ளாச்சி பயங்கரம்..கமல்ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆவேசமாக பல கேள்வி

    சென்னை: இதைவிட அதிமுகவை வேறு யாராலும் இவ்வளவு மோசமாகவும், பகிரங்கமாகவும், ஆழமாகவும் விமர்சிக்க முடியாது.

    கொடூர சம்பவங்கள் என்னைக்கோ நடந்து முடிந்தாலும் விஷயம் கடந்த மாதம் இறுதியில்தான் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. இது ஒரு கட்டத்தில் பூதாகரமாகும்போதுதான் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள். அப்படித்தான் கமலும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    மற்ற அரசியல் கட்சிகள் எல்லோருமே ஆளும் தரப்பை குறி வைத்தும், நடந்த சம்பவத்தை அரசியலாக்கியும்தான் இதை முன்னெடுத்தனர்.

    பொள்ளாச்சி வழக்கு.. மாணவர்கள் போராட்டம் எதிரொலி.. பல்வேறு கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை! பொள்ளாச்சி வழக்கு.. மாணவர்கள் போராட்டம் எதிரொலி.. பல்வேறு கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை!

    அச்சுறுத்தல்

    அச்சுறுத்தல்

    ஆனால் கமல் இதில் அரசியலை கலக்காமல், டிஜிபியை சந்தித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டும் என மனு தந்தார். இதன்பிறகு பொள்ளாச்சியில் மய்யம் சார்பில் பேரணி நடத்தினார். எனினும் இந்த சம்பவம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பாதிக்கப்பட்டவா்களை அச்சுறுத்தும் வகையிலேயே அமைந்திருப்பதுதான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

    மிஸ்டர் சிஎம்

    மிஸ்டர் சிஎம்

    அதனால்தான் கமல் இப்படி நேரடியாக "மிஸ்டர் சிஎம்" என்று கூப்பிட்டு கேள்வி கேட்கிற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டு விட்டது. இப்போதுகூட கமல் இதை அரசியலாக்கவில்லை. கமல் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் சாமான்யனின் கேள்விகள், பெண் பிள்ளைகளை பெற்று வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருக்கும் பெற்றவர்களின் கேள்விகள்!

    [ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019]

    நக்கீரன் கோபால்

    நக்கீரன் கோபால்

    அதிமுக கட்சியிலிருந்து தூக்கி எறிந்த பார் நாகராஜை, கலெக்டர் தனது சேம்பரில் வைத்து பேசி மனு வாங்குகிறார். சொந்த ஊருக்கு போய் பத்திரமாக இருக்குமாறு போலீஸ் அறிவுறுத்தி பாதுகாப்பு தருகிறது. இதெல்லாம் அதிமுக அரசுக்கு சரியாக படுகிறதா என்பதுதான் கமலின் ஆதங்கம். வீடியோவை வெளியிட்டது யார் என்று கேட்கிறார்? கமல் கேட்ட இதே கேள்விகளைத்தான் நக்கீரன் கோபாலும் கேட்டார். ஆனால் சம்மன் அனுப்பப்படுகிறது.

    400 பெண்கள்

    400 பெண்கள்

    நியாயமாக பார்த்தால், கமல் சொன்ன அத்தனை விஷயங்களையும் முக ஸ்டாலின் கேட்டிருக்க வேண்டும். முடிந்த அளவுக்கு இதை அரசியலாக்க பார்க்கத்தான் திமுக முனைவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு, ஆளும் தரப்பையே அசைத்து பார்க்கும் அளவுக்கு திமுக இந்த 4 நாட்களில் விஷயத்தை கையில் எடுத்திருந்தால் நிலைமையே தலைகீழாக இருந்திருக்கும். 1500 வீடியோக்கள், 400 பெண்கள் நாசமானதற்கு கனிமொழி கட்சி சார்பில் ஒரு போராட்டம் நடத்திவிட்டால் சரியாகிவிடுமா என்ன?

    வேறு வழியே இல்லை

    இப்போது கமல் மூலம் அந்த புரட்சி வெடிக்க ஆரம்பித்துள்ளது. "அம்மா" பெயரில் ஆட்சி என இனி ஒருவரும் சொல்லவே கூசும் அளவுக்கு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இதில் அதிமுகவுக்கு வேறு வழியே இல்லை.. எதாவது செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் கமலின் வீடியோ கொண்டுவந்து தள்ளிவிட்டது.

    சகாயம், சைலேந்திரபாபு

    சகாயம், சைலேந்திரபாபு

    இனியாவது அம்மாவின் அரசு அதைச் செய்யுமா.. எத்தனையோ அதிரடி அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சைலேந்திர பாபு போல, சகாயம் போல.. அரசு விழித்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்யத் தவறினால் பாதிப்பு அதிமுகவோடு போகாது.. பாஜகவுக்கும் சேர்த்து கஷ்டம் ஏற்படும்.

    English summary
    MNM Leader Kamalhasan attacks ADMK and DMK in Pollachi Gang rape Issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X