சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல் கேட்ட சாட்டையடி கேள்விகள் சரியே.. வாசகர்கள் அழுத்தம் திருத்தமான தீர்ப்பு!

கமல் கேட்ட கேள்விகள் குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

Google Oneindia Tamil News

சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் கமல் கேட்ட சாட்டையடி கேள்விகள் ஒவ்வொன்றும் நியாயமானவையே என்று தமிழக மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நேற்று இரவு திடீரென கமல் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் அரசின் பாராமுகம் குறித்து புட்டுபுட்டு வைத்திருந்தார்.

அதோடு "மிஸ்டர் சிஎம்.. உங்களுக்குத்தான் இந்த கேள்விகள் எல்லாம்" என்று பகிரங்கமாக சுட்டிக்காட்டியே கேள்விகளை எழுப்பி இருந்தார். இதுவரை இப்படி யாருமே ஒரு தமிழக முதல்வரை பார்த்து கேள்விகள் கேட்டதும் இல்லை, பேசி வீடியோவாக வெளியிட்டதும் இல்லை.

பொள்ளாச்சி கொடூரம்... திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் பொள்ளாச்சி கொடூரம்... திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

துணிச்சலுக்கு சபாஷ்

துணிச்சலுக்கு சபாஷ்

வீடியோ வெளியிட்டது யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இதை பற்றி எதிராக பேசுவர்களுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது? என்றெல்லாம் கட்சி தலைவராக இல்லாமல், உச்ச நடிகராக இல்லாமல், 2 பெண் பிள்ளைகளின் சார்பாக கமல் இந்த கேள்விகளை எழுப்பி இருந்தார். முதலில் கமலின் துணிச்சலுக்கு தனி சபாஷ்!

சர்வே

ஆனால் கமல் கேட்ட இந்த கேள்விகள் எல்லாம் சரிதானா, நியாயம்தானா? ஏதாவது தப்பாக பேசிட்டாரா? கேட்க கூடாத கேள்விகளை ஏதாவது கேட்டுவிட்டாரா? இதை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என "ஒன் இந்தியா தமிழ்" சர்வே நமது நேயர்களிடமே கேட்டிருந்தது. குவிந்து விட்டன வாக்குகள்.

சரியல்ல

சரியல்ல

"கேள்விகள் நியாயமானவை" என்பதற்கு 47.81 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. "சரியல்ல" என்பதற்கு வெறும் 5.43 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

நல்லது நடந்தால் சரி

நல்லது நடந்தால் சரி

அதை விட முக்கியமானது "இவை தமிழகத்தின் கேள்விகள்" என்ற ஆப்ஷனுக்கு 35.08% சதவீதம் கிடைத்திருப்பதுதான். "நல்லது நடந்தால் சரி" என்பதற்கு 11.68 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி இருக்கின்றன.

கமல் பக்கம்

கமல் பக்கம்

உண்மையிலேயே பொதுமக்கள் இந்த விஷயத்தில் கமல் பக்கம் நின்றிருக்கிறார்கள். கமலின் கேள்விகள்தான் மக்களின் கேள்விகளும் என்பதும், இந்த வாக்கெடுப்பு மூலம் தெரியவருகிறது.

English summary
MNM Leader Kamal hasan attacks TN Chief Minister Edapadi Palanisamy in Pollachi Gang Rape case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X