சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைவன்னா போட்டியிட்டேதான் ஆகணுமா.. வித்தியாசமான பாதையில் கமல்ஹாசன்!

லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடாததற்கு என்ன காரணம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன் -வீடியோ

    சென்னை: அதென்ன... கட்சி ஆரம்பித்தால், உடனே ஒரு தொகுதியில் நின்னு போட்டியிட்டு பலத்தை காட்டினால்தான் ஒரு தலைவனா என்ன? அப்படித்தான் கமலை எதிர்பார்க்கிறார்கள்.

    மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் மய்யத்தின் களப்பணி என்பது அதிகம். கிட்டத்தட்ட பாமக செய்த அதே களப்பணியைதான் மய்யமும் செய்தது. ஆனால் மக்களை அணுகும் முறையும், கையில் எடுக்கும் பிரச்சனையும் ஆழமானதாக இருந்தது. இந்த ஒரு வருடத்தில் தேர்தலை சந்திக்க நினைப்பதே ஒரு கட்சிக்கு பெரிய விஷயம்.

    அதிலும் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை கமல் நியமித்தது அதைவிட பெரிய விஷயம். ஒரு தொகுதியாவது தங்களுக்கு தர மாட்டார்களா என சமக, தமாகா போன்ற சீனியர் கட்சிகளே ஏங்கி காத்திருக்கும் நிலையில், கமல் தனித்து போட்டி என்பதை மனதார பாராட்டுபவர்கள் மிகக்குறைவுதான்!

    ஒசூர் சட்டசபை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் வா.புகழேந்தி... நெல்லை வேட்பாளர் அதிரடி மாற்றம்ஒசூர் சட்டசபை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் வா.புகழேந்தி... நெல்லை வேட்பாளர் அதிரடி மாற்றம்

    கலைஞர்கள்

    கலைஞர்கள்

    இந்த வேட்பாளர்கள் பெயர் பட்டியலை பார்த்தாலே வித்தியாசமாக இருக்கிறது. வக்கீல், டாக்டர், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, கலைஞர்கள், படைப்பாளிகள் என ஒவ்வொரு தரப்பிலும் உள்ளனர். இதேபோலதான் தேர்தல் அறிக்கையும்.

    உதயநிதி கேள்வி

    உதயநிதி கேள்வி

    50 வருடமாக கமல் தூங்கி கொண்டிருந்தாரா, இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என உதயநிதி கேட்கிறார். உதயநிதி கேட்ட அதே கேள்வியைதான் இன்று சாமான்ய மக்களும் திமுக, அதிமுகவை பார்த்து கேட்கிறார்கள். நீட் தேர்வு, காவிரி பிரச்சனை, அத்திக்கடவு என இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடையாது. அதே சமயத்தில் இந்தபிரச்சனைகளை தீர்த்து விட்டால் ஒருக்காலும் இங்கு அரசியலும் செய்ய முடியாது என்பதை திராவிட கட்சிகள் நன்கு உணர்ந்துள்ளன.

    தண்ணீர் விலை

    தண்ணீர் விலை

    அதனால்தான் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் வழக்கமான உறுதிமொழிகளில் இவை கட்டாயம் இடம்பெறும். ஆனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் அகற்றப்படும் என்பதையும், மனித கழிவுகளை மனிதனே அள்ளும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்பதையும் இதே இருபெரும் திராவிட கட்சிகள் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கலாமே? ஆனால் இதை கமல் முன்னிலைப்படுத்தி சொன்னதில் தவறில்லையே?

    2-ம் கட்ட தலைவர்கள்

    2-ம் கட்ட தலைவர்கள்

    அதேபோல, மய்யத்தை வழி நடத்தி செல்ல 2-ம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லைதான். ஆனால் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்பது கமலுக்கு பெரிய விஷயம் இல்லை. அவர் போட்டியிட வேண்டும் என்று எத்தனையோ பேர் விருப்பமனுவும் தாக்கல் செய்தனர். ஆனால் ஒருதொகுதியில் போட்டியிடுவதாகவே வைத்துகொண்டால், மற்ற வேட்பாளர்களுக்கு யார் பிரச்சாரம் செய்வார்கள்?

    தேனி பிரச்சாரம்

    தேனி பிரச்சாரம்

    மேலும், தான் நிற்கும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு கமல் ஆளாக நேரிடும். மற்ற வேலைகளை ஒன்றும் பார்க்க முடியாது. இப்படித்தான் துணை முதல்வர் தன் மகனுக்காக தேனியில் பிரச்சாரம் செய்து வருகிறார். தன் மகன் வெற்றி பெற வேண்டும் என்பது தனக்கான கவுரவ பிரச்சனை. இதனால் அவரால் பக்கத்து பகுதியான மதுரைக்குகூட பிரச்சாரத்துக்கு போக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    பலம், பலவீனம்

    பலம், பலவீனம்

    இது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலைமைதான் கமலுக்கும் ஏற்பட்டு விடும். மேலும் கிடைக்க போகும் வாக்கு சதவீதத்தை வைத்துதான், தன் கட்சியின் பலம், பலவீனத்தை அறிய துணிந்து ஆசைப்படுகிறார். இதனால்தான் போட்டியிடவில்லை என தெரிகிறது. திமுக தலைவர் ஸ்டாலின்கூட ஒரு தொகுதியிலும் போட்டியிடவில்லை. அதற்காக அவர் ஒரு கட்சி தலைவர் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

    நல்ல தாக்கம்

    நல்ல தாக்கம்

    ஆனால் கமல் மட்டும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார், பயப்படுகிறார் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? கமலின் வேட்பாளர்கள் தேர்வு ஆகட்டும், தேர்தல் அறிக்கை ஆகட்டும்.. இன்ன பிற விஷயங்கள் ஆகட்டும்.. பாராட்டும்படியே உள்ளது.. நிச்சயம் மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

    English summary
    There is a need to campaign for MNM Leader Kamalhasan in 40 Constituencies, which is why he is not contesting the Lok Sabha election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X