சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு தினகரன்.. திமுகவுக்கு கமல்ஹாசன்.. என்னென்ன நடக்குமோ.. கிலியில் தலைவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு தமிழகம் முழுக்க பரவலாக உள்ள ஆதரவு, பிற கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வரும் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நான்குமுனைப்போட்டி உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அடங்கியது ஒரு கூட்டணி என்றால், திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கியது மற்றொரு கூட்டணி. தேமுதிகவை இவ்விரு கூட்டணிகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கப்போகிறது.

தனித்துப் போட்டி

தனித்துப் போட்டி

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், தேர்தலில் சிறப்பாக செயல்படும் டிராக் ரெக்கார்ட் வைத்துள்ள, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச்செயலாளர் தினகரன், இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. இதனால் அந்த கட்சி தனித்துப் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது.

கமல்ஹாசன் விமர்சனம்

கமல்ஹாசன் விமர்சனம்

இதேபோல இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது மக்கள் நீதி மையம் கட்சி. அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார் கமல்ஹாசன். அதிமுக, திமுக, பாமக என கமல்ஹாசனின் விமர்சன சாட்டையடிக்கு, எந்த கட்சியும் தப்பவில்லை. எனவே அவரது கட்சியும் தனித்துதான் போட்டியிடப் போவது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் நான்கு முனைப் போட்டி என்பது உறுதியான விஷயமாகிவிட்டது.

அதிமுக வாக்குகள் தினகரனுக்கு

அதிமுக வாக்குகள் தினகரனுக்கு

தினகரனை பொறுத்தளவில், அதிமுகவில் கணிசமான வாக்குகளை அவர் ஈர்ப்பார் என்பதுதான் அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைத்தால் தான் தப்பிக்க முடியும் என்ற எண்ணத்தில் அதிமுக தலைமை, இதனால்தான், தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10% அளவிற்கு அதிமுக வாக்குகளை தினகரன் ஈர்ப்பார். இது எதிர் முகாமில் உள்ள திமுக கூட்டணிக்கு சாதகமாக செல்லும் என்று கணிக்கப்படுகிறது.

இறங்கியாடும் கமல்

இறங்கியாடும் கமல்

ஆனால் அங்குதான் ஒரு திருப்பமாக, கமல்ஹாசன் கட்சி களமாட உள்ளது. கமல்ஹாசனின், கடவுள் மறுப்புக் கொள்கை, திராவிடக் கொள்கை போன்ற பலவும் திமுகவுடன் பொருந்திப் போவதாக உள்ளது. ஆனால் திமுகவில் உள்ள வாரிசு அரசியல் உள்ளிட்ட சில விஷயங்களைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். எனவே தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தியை விரும்புவோர் கமல்ஹாசன் கட்சிக்கு வாக்களிக்கக்கூடும். திமுகவிடம் உள்ள பல அடிப்படை கொள்கைகள் கமல்ஹாசன் கட்சியில் உள்ளது. ஆனால் அதே கொள்கைகளுடன் ஒரு மாறுபட்ட தலைவர், மாறுபட்ட கட்சி தேவை என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய வாக்காளர்களின் ஓட்டுகள் கமல்ஹாசன் கட்சிக்கு செல்லும். இது திமுகவின் வாக்குகளை தமிழகம் முழுக்க கணிசமாக பிரித்துவிடும்.

தலைவர்கள் கிலி

தலைவர்கள் கிலி

தினகரனை பார்த்து அதிமுக தரப்பும், கமல்ஹாசன் கட்சியின் வளர்ச்சியை பார்த்து திமுக தரப்பும் அச்சமடைந்துள்ளனர். எனவேதான் கமல்ஹாசனுக்கு எதிராக முரசொலியில் சமீபகாலமாக தொடர் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும் திமுகவினர் கமல்ஹாசனை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதை பார்க்க முடிகிறது. தனித்தனியாக போட்டியிட்டாலும் கூட, அதிமுக மற்றும் திமுக தலைவர்களுக்கு, தினகரன் மற்றும் கமல்ஹாசன் பெரும் கிலியை உண்டு செய்து உள்ளனர்.

English summary
TTV Dhinakaran and Kamal Hassan will play a crucial role in the upcoming Lok Sabha election in Tamilnadu. Both the major political parties in Tamilnadu are afraid of these newcomers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X