சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல்ஹாசன் 'டிவி உடைத்த' வீடியோவில் 'பீப்' ஒலி.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.. புது வீடியோ இதோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல்ஹாசன் டிவி உடைத்த வீடியோவில் பீப் ஒலி..புது வீடியோ இதோ!

    சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு பிரச்சார வீடியோவுக்கு எதிராக, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக தேசியப் பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும், இதனால் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போலவும், மக்கள் நீதி மய்யம் ஒரு தேர்தல் விளம்பரத்தை எடுத்திருந்தது.

    இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. அதேநேரம் பிற கட்சிகளிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியது. முனுமுனுப்புகளும் கேட்டன.

    உங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கைஉங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம்.. ஓட்டை மட்டும் கொடுங்கள்.. தமிழகத்தை மீட்போம்.. கமல் கோரிக்கை

    சர்ச்சைக்குரிய வார்த்தைகள்

    சர்ச்சைக்குரிய வார்த்தைகள்

    இதையடுத்து, கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறி அந்த விளம்பரத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக பிற கட்சியினர் சார்பில் புகார் சென்றது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் விளம்பரத்தில் மாற்றங்களை செய்துள்ளது. பீப் ஒலி ஒலிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

    இதுதான் புது வீடியோ

    இதுகுறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் தனது கருத்தை இன்று பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். கமல்ஹாசன் கூறியுள்ளதை பாருங்கள். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரச்சாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும்.

    சுதந்திரம்

    நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே மாண்பு தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க விடுவோம். இன்று ஆள்வோருக்கு அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின் சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    நீட் விவகாரம்

    நீட் விவகாரம்

    இந்த வீடியோவில் எங்கெல்லாம் பீப் ஒலி கேட்கிறது என்பது ஏற்கனவே விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் பெயரை கமல்ஹாசன் தனது விளம்பரத்தில் குறிப்பிடாமல் இருந்தார். எனவே அது பீப் ஒலியிலிருந்து தப்பிவிட்டதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    English summary
    Kamal Hassan TV advertisement get beep sound after election commission imposed action.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X