சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் கமல்ஹாசன் : சீமான் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் நடிகர் கமல்ஹாசன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்தலுக்காக பயன்படுத்துகிறார் நடிகர் கமல்ஹாசன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும் என கமல் மீது சீமான் விமர்சனம் வைத்துள்ளார்.

தமிழீழ அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தேர்தல் பணிகள் சிறப்பாக செய்து கொண்டு வருகிறோம் தலைவரின் பிறந்தநாளுக்கு முன்பு வேட்பாளர்களை அறிவித்து விடுவோம் என்று கூறினார்.

Kamal Hassan uses Bigg Boss show for elections says Seeman

வேட்பாளர் பட்டியல் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அறிவிப்போம். சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது ரகசியமாக இருக்கட்டும்

7.5 விழுக்காட்டில் முதல்வர் துணிந்து முடிவு எடுத்தது போல் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முதல்வர் துணிந்து முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. மக்களின் பிரச்சினையை நாங்கள் பேசுகிறோம், பாஜக மக்கள் பிரச்சினைக்கு வராது

ரஜினியும், குருமூர்த்தியும் நண்பர்கள் அவர்கள் சந்தித்து எது குறித்து பேசினார்கள் என்பது தெரியாமல் கருத்து சொல்ல முடியாது என்று சொன்ன சீமான்,
கட்சிகளுக்கு அதரவு கொடுப்பது குறித்து ரஜினி சொன்னால்தான் கருத்து ரசிகர்கள் சொல்வதெல்லாம் கருத்தாகாது என்று கூறினார்.

சகாயம் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பேசிய சீமான், சகாயத்திற்கு நான் ஏற்கனவே அழைப்பு விடுத்து விட்டேன். முடிவு அவருடைய கையில் இருக்கிறது என்றார்.

நாளை பலப்பரீட்சை.. டொனால்ட் டிரம்பை காட்டிலும் 10 புள்ளிகள் முன்னணியில் ஜோ பிடன்! நாளை பலப்பரீட்சை.. டொனால்ட் டிரம்பை காட்டிலும் 10 புள்ளிகள் முன்னணியில் ஜோ பிடன்!

கொரோனா குறைந்து வருகிறது தீபாவளிக்கு பிறகு என்ன நடக்கும் என்பது தெரியாது. பல்வேறு இடங்களில் பண்டிகைகளுக்கு பிறகு தான் கொரோனா அதிகரித்துள்ளது.மாணவர்கள் ஓராண்டு, ஈராண்டு தேர்வு எழுதவில்லை என்றால் ஒன்றும் கெட்டு போய் விடாது. இக்கட்டான சூழ்நிலையில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கட்சி கொடி வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்.விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் நடிப்பவர்களுக்கே முதலிடம் கிடைக்கும் என கமல்ஹாசனை சீமான் விமர்சித்துள்ளார்.

English summary
Seeman, the coordinator of the Naam Tamilar katchi, has said that actor Kamal Hassan is using the Bigg Boss show for elections. Seeman has criticized Kamal saying that only those who act in a society without awareness will get first place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X