சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசை விமர்சனம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    டெல்லி கலவரம்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்

    குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் கலவரங்களில் இதுவரை 23 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    Kamal Hassan welcome Rajinikanth press meet Delhi violence

    இது குறித்து கமல்ஹாசன் நேற்று இரவு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால் முன்னணி நடிகரும், விரைவில் தனிக்கட்சி துவங்க போவதாக அறிவித்த ரஜினிகாந்த் எந்த கருத்தும் கூறாமல் இருந்தார்.

    இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில், இந்த சம்பவத்திற்காக மத்திய அரசை கண்டிப்பதாகவும், மத்திய உளவுத்துறையின் பெரிய தோல்வி இது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். தன்னை பாஜக ஆதரவாளர்கள் சித்தரிப்பது தவறானது என்று அவர் விளக்கம் அளித்தார்.

    இதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனைஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை

    இந்த பேட்டி வெளியாகிய ஒரு மணி நேரத்திற்குள்ளாக கமல்ஹாசன் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில்,
    சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க.
    இந்த வழி நல்ல வழி.
    தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
    வருக, வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதன் மூலம் ரஜினிகாந்த் இதுவரை வலதுசாரி ஆதரவாளராக இருந்தது போலவும், இப்போது இந்தப் பக்கம் தனது ஆதரவு கரத்தை நீட்டி உள்ளதைப் போலவும் பொருள் படுமாறு கமல்ஹாசன் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் மறைமுகமாக இதுவரை ரஜினிகாந்த் வலதுசாரி ஆதரவாளர் என்று கூறப்படும் விமர்சனத்தை கமல்ஹாசனும் வழிமொழிந்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்துக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ள அதே நேரத்தில் தனக்கே உரிய குசும்பு பாணியில் ஒரு குத்து விட்டார் கமல் ஹாசன் என்றுதான் கூறவேண்டும்.

    English summary
    actor Kamal Hassan welcome Rajinikanth interview on union government. he tweeted on this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X