சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2021ம் ஆண்டு கமல்ஹாசனுக்குரியது.. ரஜினியும் இணைவார்.. மாற்றம் வரும்.. சொல்கிறார் சி.கே. குமாரவேல்

Google Oneindia Tamil News

சென்னை: 1967ம் ஆண்டில் ஏற்பட்ட மாற்றம் இப்போது ஏற்படும். ரஜினி சார் கட்சி ஆரம்பித்தால் கமல் ரஜினி சார் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தான் 2021ல் மார்க்கெட் உள்ளது உள்பட பல்வேறு விஷயங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிகே குமாரவேல் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

    2021 Election-ல் MNM Party-க்கு தான் Market | CK Kumaravel Interview | Oneindia Tamil

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிகே குமாரவேல் 'ஒன் இந்தியா' தமிழுக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நமது நெறியாளர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலையும் இப்போது பார்ப்போம்.

    ரஜினி 2021ல் கட்சி ஆரம்பிப்பார்.. அப்புறம் அதிமுக திமுகவை வீழ்த்துவார்.. சொல்வது அர்ஜூன் சம்பத்! ரஜினி 2021ல் கட்சி ஆரம்பிப்பார்.. அப்புறம் அதிமுக திமுகவை வீழ்த்துவார்.. சொல்வது அர்ஜூன் சம்பத்!

    என்ன செய்தது

    என்ன செய்தது

    கேள்வி: லாக்டவுனுக்கு மத்தியில் மக்கள் நீதி மய்யத்தால் எந்த அளவிற்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது. ஏனெனில் திமுகவும் அதிமுகவும் நிறைய விஷயங்களில் இறங்கி களப்பணி செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தால் எந்த அளவிற்கு செய்ய முடிந்தது. என்ன செய்ய முடியவில்லை?

    பதில்: செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. மற்ற நடிகர்கள் எல்லாம் ரசிகர் மன்றம் ஆரம்பித்த போது, கமல் சார் மட்டும் வித்தியசமாகவும் மக்களுக்கு நல்லதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பி நற்பணி மன்றம் ஆரம்பித்தார். அந்த காலத்தில் இருந்து ரத்த தானம், உடல் தானம் உள்ளிட்ட நலத்திட்டங்களை நற்பணி மன்றம் செய்தது. கமல்ஹாசனே உடல் தானம் செய்துள்ளார். அந்த வகையில் கொரோனா வந்த உடன் நிறைய உதவிகளை எங்கள் கட்சி தொண்டர்கள் செய்தார்கள் முககவசம் வழங்குவது உள்ளிட்ட பல நல திட்டங்கள் செய்தோம். அந்த புகைப்படங்களும் வந்தது. கமல்சார் எங்களை கூப்பிட்டு கொடுக்கும் நம்முடைய படங்கள் இருக்கட்டும். வாங்குபவர்கள் படம் வேண்டாம் என்றார். கமல் சாரின் இந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் எங்கள் வேலைக்கு மற்றவர்களை போல் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம். வாங்குபவர்களின் முகம் தெரியாது. எங்கள் கட்சியினர் மட்டுமல்ல, மாற்று கட்சியினருக்கும் நாங்கள் உதவி செய்துள்ளோம். ஆனால் செய்த உதவிகளின் ரீச் என்று பார்த்தால் ஆண்ட கட்சிகளுக்கு தான் இருந்தது. நாங்கள் ஆண்ட கட்சி இல்லை என்பதால் ரீச் ஆகவில்லை. மற்ற கட்சிகளுக்கு அரசியல் என்பது வருவாய் ஈட்டும் தொழில். எங்களின் அரசியல் என்பது மக்களுக்கு ஏதாவது மாறுதல் செய்ய முடியுமா என்பதுதான். நாங்கள் இருப்பதை வைத்து மற்றவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

    மநீமவில் இணைந்தது ஏன்

    மநீமவில் இணைந்தது ஏன்

    கேள்வி: கொள்கை பரப்பு செயலாளர் பதவியை உங்களுக்கு கமல்சார் எப்படி கொடுத்தார்.

    பதில்: எப்படி கமல்சார் இந்த பதவியை கொடுத்தார் என்று தெரியவில்லை. இந்த பதவிக்கு என்னை தகுதி உள்ளவனாக மாற்றி கொள்வேன். நீங்கள் செய்யும் வேலை எனக்கு பிடித்தது. அதனால் வந்தேன். எனக்கு பதவி வேண்டாம் என்று கமல் சாரிடம் சொன்னேன்.

    கேள்வி: நீங்கள் சினிமா ரசிகர் என்பதால் கமல் கட்சியில் இணைந்தீர்களா? அல்லது கமல்சாரிடம் ஏதேனும் வித்தியாசமான ஐடியா இருந்ததால் மய்யமில் சேர்ந்தீர்களா?

    பதில்: சினிமா ரசிகராக அவரை பிடிக்குமா என்று கேட்டால் எனக்கு மிகவும் பிடிக்கும். கமல் சாரின் அன்பே சிவம், இந்தியன் படம் மிகவும் பிடிக்கும். ரஜினி சாரின் படங்களும் பிடிக்கும். கமல் சார் கட்சியில் சேர சினிமா காரணம் அல்ல. கமல் சாரின் கோபம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது தைரியம் பிடித்திருந்தது. அதனால் தான் அவருடன் இணைந்தேன்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    கேள்வி: கட்சிக்கு மைனசாக சில விஷயங்கள் பேசப்பட்டது. கட்சியில் சில சலசலப்பு ஏற்பட்டது. நீங்கள் கூட கட்சியை விட்டு விலகுவதாக முடிவை எடுத்தீர்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் ரொம்ப நாள் தாங்காது என்பது போல பேசினார்களே?

    பதில்: மாறுபட்ட கருத்துக்கள் கட்சியில் இருக்க வேண்டும். ஒரு குடும்பம் என்றால் மாற்று கருத்து அவசியம். அப்படித்தான் எனக்கும் அப்போது இருந்தது. நான் கட்சியை விட்டு விலகிய போது. அரசியலே வேண்டாம் என தொண்டு நிறுவனங்களுடன் சில காலம் பயணித்தேன். அப்போது நிறைய கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு வந்தது. கமல் சார் தான் மனசு முழுவதும் இருந்தார். அதனால் தான் நான் அவரிடம் மீண்டும் சென்று, நான் செய்தது தவறு. நான் மீண்டும் உங்களுடன் வருகிறேன் என்றேன். அப்போது என்னை கமல் சார் பேசக்கூட விடாமல் தடுத்து, அதையெல்லாம் விடுங்கள். நீங்கள் தேர்தல் அனுபவத்தை மிஸ் பண்ணீட்டீங்க.. நாம வேகமாக பயணிக்க வேண்டும் என்று என்னை கூடவே வைத்துக்கொண்டார். இதே வேறு கட்சியாக இருந்தால் மன்னிப்பு கடிதம் கேட்டிருப்பார்கள். அத்துடன் காலில் விழ வைத்து பத்திரிக்கைக்கு செய்தியும் அனுப்பி இருப்பார்கள். ஆனால் எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. என்னை நல்ல பதவி கொடுத்து வைத்துள்ளாயர்.

    மநீமவில் முக்கியத்துவம்

    மநீமவில் முக்கியத்துவம்

    கேள்வி: மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஸ்ரீபிரியா உள்ளிட்ட நிறைய நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்லப்படுகிறதே? அதை பற்றி கட்சியின் உள்ளே உள்ள உங்களின் பதில் என்ன?

    பதில்: நடிகர் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. ஸ்ரீபிரியாவின் பெயரை நீங்கள் சொன்னதால் சொல்கிறேன். அவர் மிகவும் திறமையானவர். ஆனால் அவரை விட நாங்கள் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறோம். அவருக்கு மினிமம் முக்கியத்துவம் தான் தரப்பட்டது. ஐபிஎஸ் மவுரியா, ஐஏஎஸ் ரங்கராஜ், நான், சேகர், உமாதேவி உள்ளிட்டவர்கள் தான் 2வது லைனில் உள்ளோம். இதில் யாருமே சினிமாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. சினிமா நல்ல ஊடகம். தகவல் தொடர்பை கரைத்துக் குடித்தவர்கள். நான் ட்விட் போட்டால் ஐந்தாயிரம் பேருக்கு ரீச் ஆகும் என்றால், ஸ்ரீபிரியா மேடம் போட்டால் ஒரு லட்சம் பேருக்கு ரீக் ஆகும். ஆளுமை , பிரபலம் கலந்த கவலையாக மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது.

    கமலுக்கு உரியது

    கமலுக்கு உரியது

    கேள்வி: எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவரில் எம்ஜிஆர் மாஸாகவும், சிவாஜி கிளாசாகவும் படங்கள் செய்தார்கள். இதில் மாஸாக பண்ணிய எம்ஜிஆருக்கு அரசியல் வெற்றி கிடைத்தது. கிளாசாக படம் செய்த சிவாஜிக்கு அரசியலில் வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் மனதில் மட்டுமே இடம் கிடைத்தது. ரஜினி கமல் என்ற ஆங்கிளில் பார்ததால் ரஜினி மாஸாகவும் கமல் கிளாசாகவும் படங்கள் செய்திருந்தார். எனவே அந்த வகையில் சிவாஜி போல் அரசியலில் வெற்றி பெற முடியாத நிலை வந்துவிடுமா?

    பதில்: 21ம் நூற்றாண்டு மக்களுக்கு 20ம் நூற்றாண்டு வரலாறை வைத்துக்கொண்டு, 19ம் நூற்றாண்டு பாணியில் சொல்லிக்கொடுத்தால் வேலை ஆகாது. மக்கள் முழுவதும் மாறிவிட்டார்கள். 2020ல் நாம் இருக்கிறோம். மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பார்ப்பார்கள். 1967ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தது அல்லவா அந்த மாதிரியான ஒரு மாற்றம் இப்போது வரும். இந்த தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும்.

    கமலுடன் ரஜினி

    கமலுடன் ரஜினி

    கேள்வி: ரஜினி கமல் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா?

    பதில்:ரஜினி கமல் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் கட்சியை அவர் ஆரம்பித்து வர வேண்டும். ஏனெனில் நாங்கள் ஆரம்பித்து இரண்டு வருடம் போய்விட்டோம்.ரஜினி சார் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இருவருக்குமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது.
    இன்னும் பல கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலையும் வீடியோவில் காணலாம்.

    English summary
    Kamal Rajini may join 2021 election , The change that took place in 1967 will come: Big market in 2021 election for Makkal needhi maiam: MNM CK Kumaravel Interview with One India Tamil
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X