சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ.. "அந்த" மர்மம் இதுதானா.. கமீலாவை பற்றி கமலுக்கு போன ரிப்போர்ட்.. தினமும் ஒரு திடுக்..!

கமல்ஹாசன் கமீலா நாசரை கட்சியில் இருந்து நீக்க என்ன காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் விலகி உள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து, தினம் ஒரு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இப்போதும் ஒரு காரணம் வெடித்துள்ளது.
கமீலா நாசரை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று ஒரு அறிவிப்பு வெளியானது.. இது பல தரப்பு மக்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இதற்கு 2 காரணங்கள் இருப்பதாக நேற்றைய தினம் தகவல்களும் கசிந்தன..

Recommended Video

    கமீலா நாசருக்கு கமல் ‘கல்தா’.. மக்கள் நீதி மையத்தில் இருந்து விடுவிப்பு!

    முதலாவதாக, நடந்து முடிந்த தேர்தலில், விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவினை கமீலா தாக்கல் செய்திருந்த போதிலும், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாம்.. இதனாலேயே விரக்தியடைந்த கமீலா, கடந்த வாரமே தன்னுடைய ராஜினாமா லெட்டரை கட்சிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    ஆந்திரா, தெலுங்கானவிற்கு ஆக்சிஜன் அனுப்பியது ஏன் - தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் ஹைகோர்ட்ஆந்திரா, தெலுங்கானவிற்கு ஆக்சிஜன் அனுப்பியது ஏன் - தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் ஹைகோர்ட்

    தயாரிப்பாளர்கள்

    தயாரிப்பாளர்கள்

    மற்றொரு காரணமாக, சரத்குமாருடன் கூட்டணி வைத்தது கமீலாவுக்கு பிடிக்கவில்லை என்றார்கள்.. அதாவது, 2015-ல் நடந்த நடிகர் சங்க தேர்தலில், நாசர் - விஷால் அணியினரை ராதிகாவும், சரத்குமாரும் மிக கடுமையாக விமர்சித்தனராம்.. இது நடிகர் சங்க மோதலையும் தாண்டி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் எதிரொலித்து வெடித்தது.. அப்போதிருந்தே இவர்களுக்குள் புகைச்சலும் இருந்து வந்துள்ளது.

    கமீலா

    கமீலா

    அப்படி இருக்கும்போது, இதெல்லாம் நன்றாக தெரிந்தும், சரத்குமாருடன் கூட்டணி வைத்து விட்டாரே என்று கமீலா தரப்பு அதிருப்தி அடைந்ததாக சொல்கிறார்கள்.. எனினும், கமல் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாராம், அரசியல் வேறு, சினிமா வேறு, ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்க்க கூடாது என்று வலியுறுத்தியும், கமீலா தரப்பு ஏற்க மறுத்து, இந்த விலகல் பற்றி அறிவித்ததாக கூறப்பட்டது.

    சீட்

    சீட்

    இப்போது கமீலா விலகலுக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. சீட் தராத பட்சத்தில் தேர்தல் பணிகளிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்துள்ளார் கமீலா.. அதேசமயம், இந்த 3 மாத காலமாகவே, கமீலா மீதான வேறு சில புகார்கள் கட்சி தலைமைக்கு அவ்வப்போது சென்றுள்ளன..

    ஆயிரம் விளக்கு

    ஆயிரம் விளக்கு

    குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில், கமல் பிரசாரம் செய்ய வரும்போது, 50க்கும் மேற்பட்ட சிறார்களுடன், கட்சி கொடியுடன் ஊர்வலமாக கமீலா சென்றதும் விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து புகார்கள் வரவும்தான் கமல் இப்படி ஒரு அதிரடியை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன... நெருங்கிய நண்பரின் மனைவி என்றாலும், கட்சியில் முக்கிய நபராக இருந்தாலும், புகார் என்று வந்ததும், கமல் எடுத்த இந்த முடிவு, கமலின் நன்மதிப்பை கட்சியினரிடையே கூட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன்மூலம் கமல் - நாசர் நட்பு எந்தவிதத்திலும் முறியாது என்றும் நம்பப்படுகிறது.

    கட்சி

    கட்சி

    இப்படி பலவித தகவல்கள் றெக்கை கட்டி பறந்தாலும்கூட கமீலா நாசீர், தன் தரப்பு விளக்கத்தை நேரடியாகவும், தெளிவாகவும் முன்வைத்துள்ளார். "என் பையனை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது... குடும்பத்தையும், அரசியலிலும் சேர்த்து கவனிக்க முடியவில்லை.. கமலுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது.. அது எப்போதுமே தொடரும்.. நான் கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்னுடைய மக்கள் பணி தொடரும்.. குடும்ப சிக்கல்கள் தீர்ந்ததும் இன்னும் சில ஆண்டுகளில் அரசியலில் ஈடுபடுவேன்" என்று கூறியுள்ளது அழுத்தமாக பதிவு செய்யத்தக்கது.

    English summary
    Kamal: Why Kameela Nassar removed from Kamalahasans MNM party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X