சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்? இந்த கணிப்பை பாருங்க!

நேற்று வெளியான நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி, மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் மிக முக்கியமான கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Thanthi TV Exit polls : செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்

    சென்னை: நேற்று வெளியான நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி, மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் மிக முக்கியமான கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    லோக்சபா தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகளால் தற்போது தேசிய அளவில் அரசியல் ஜுரம் குடிகொண்டு இருக்கிறது.

    ஆனால் இந்த கருத்து கணிப்பு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் அடித்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். மக்கள் நீதி மய்யம் எதிர்காலத்தில் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க இந்த தேர்தல் உதவ வாய்ப்புள்ளது.

    நாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு நாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு

    நியூஸ் எக்ஸ் கணிப்பு

    நியூஸ் எக்ஸ் கணிப்பு

    நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதிமுக கூட்டணி 12 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. அமமுக ஐந்து இடங்களில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    அமமுக எப்படி

    அமமுக எப்படி

    இந்த கணிப்பின் படி அமமுக நேரடியாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் ஐந்து இடங்களில் தோல்வி அடைய செய்து இருக்கிறது. அதேபோல் அதிமுகவிற்கு எதிரான வாக்குகளை அதிக இடங்களில் கண்டிப்பாக அமமுக பிரித்து இருக்கவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம்தான் அதிமுக கூட்டணி குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    மநீம இல்லை

    மநீம இல்லை

    அமமுக போல அல்லாமல், மக்கள் நீதி மய்யம் எந்த இடத்திலும் வெற்றி பெறும் என்று கணிப்பில் கூறவில்லை. தமிழகத்தில் 36 இடங்களில் மநீம போட்டியிட்டது. ஆனால் ஒன்றில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்படவில்லை. ஆனாலும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு குட் நியூஸ் இருக்கிறது.

    திமுகவின் வாக்குகள்

    திமுகவின் வாக்குகள்

    திமுகவின் கூட்டணி 21 இடங்களில் வெல்லும் என்கிறார்கள். ஆனால் திமுக தனியாக தான் போட்டியிட்ட 20 இடங்களில் 15 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. 5 இடங்களில் தோல்வி அடைய உள்ளது. இந்த இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி , அமமுக வெல்லும் என்று கணிக்கப்பட்டது. இதற்கு திமுக கூட்டணியின் வாக்குகள் அதிகம் பிரிந்ததே காரணம் என்கிறார்கள்.

    எப்படி போட்டி

    எப்படி போட்டி

    கருத்து கணிப்பின்படி முக்கியமாக மக்கள் நீதி மய்யம் திமுக நேரடியாக மோதும் தொகுதிகளில்தான் திமுக தனது வாக்குகளை இழந்துள்ளது. கருத்து கணிப்பின்படி இந்த தொகுதிகளில்தான் திமுக அதிமுக, அல்லது அமமுகவிடம் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அதாவது திமுக மநீம போட்டியிட்ட சில இடங்களில் அதிக வாக்குகளை இழந்து இருக்கிறது.

    எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது

    எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது

    இதன் மூலம் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகளை கவரும் காந்தமாக கமல்ஹாசன் உருவெடுக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் எக்ஸ் கணிப்புகளின்படி தெரிய வருகிறது. தேர்தல் முடிவுகளும் இப்படி வந்தால் மக்கள் நீதி மய்யம் 5% வாக்குகளை பெறுவதற்கு கூட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் மக்கள் நீதி மய்யமும், கமல்ஹாசனும் முக்கிய சக்திகளாக மாறுவார்கள்.

    English summary
    Kamal Haasan will be a deciding factor in the future?- News X Poll result shows his vote bank as game changer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X