சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு கட்சியையும் விடலை.. மொத்தமாக கழுவி கழுவி ஊற்றிய கமல்ஹாசன்

திருவாரூரில் கமல் பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு கட்சியையும் விடலை!.. மொத்தமாக விமர்சித்த கமல்ஹாசன் - வீடியோ

    சென்னை: அதிமுக, திமுக, பாமக என ஒரு கட்சியையும் விடாமல் கமல் தன் பேச்சின்போது கழுவி கழுவி ஊற்றிவிட்டார்!

    நேற்று மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து ஓராண்டு முடிந்ததையொட்டி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருவாரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது பேசும்போது சொன்னதாவது:

    "குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது. தமிழகத்துக்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்தான். குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். அதனால்தான் திருவாரூரில் கூட்டம் நடத்துகிறேன்" என்றார்.

    திருவாரூர்

    திருவாரூர்

    திமுகவுடன் கொஞ்ச காலமாக லடாயில் இருந்தாலும், திருவாரூர்வரை மெனக்கெட்டு சென்று இப்படி கடுமையாக வாரிசு அரசியலை பற்றி இதுவரை எந்த அரசியல் தலைவரும் சொன்னதில்லை. திருவாரூரை சொல்கிறார் என்றால் கருணாநிதியைதான் நேரடியாக விமர்சிக்கிறார் என்று தெரிகிறது.

    கருணாநிதி

    கருணாநிதி

    வாரிசு அரசியலை கொண்டு வந்தது கருணாநிதி என்பதால்தான் அவர் ஊருக்கே போய் கமல் பேசியுள்ளார். இதற்கடுத்ததாக கமல் கிழித்து தொங்க விட்ட கட்சி பாமகதான். முன்னதாக ஆழ்வார்பேட்டையில் பேசிய கமல், "மக்கள் நலன் மட்டும்தான் எங்கள் கொள்கை. கொள்கை குறித்து கட்டுக் கட்டாக புத்தகம் போட்டவர்கள் எல்லாம் அதைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். இப்போது கொள்கை அடிப்படையில் கூட்டணி என்று பிதற்றுகிறார்கள்" என்றார்.

    கழகத்தின் கதை

    கழகத்தின் கதை

    கமல் எந்த புத்தகத்தை பற்றி சொல்கிறார் என்றால், கடந்த 2017-ம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ், 'கழகத்தின் கதை' என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அதில் அதிமுக தொடக்கம் முதல் அன்று வரை கடந்து வந்த பாதைகள் குறித்தும், இதுவரை அதிமுக செய்த ஊழல்கள் குறித்தும் புட்டு புட்டு அதில் வைத்திருந்தார். இதுக்கும் ஒருபடி மேல போன, அன்புணி ராமதாஸ் அதிமுக அரசு செய்த 24 மெகா ஊழல்கள் குறித்த முழு விவரங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்திருந்தார். இதனைதான் கமல் இப்படி விமர்சித்தார்.

    மெகா கூட்டணியா?

    மெகா கூட்டணியா?

    பின்னர் அதிமுகவையும் கமல் விட்டு வைக்கவில்லை. "மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். துரோகத்தின் சின்னம் பல உள்ளது, நாங்கள் "நேர்மையின் சின்னம்" என்றும், மேலிடத்தில் ரைய்ட் விடப்போறாங்க. விட்டுப்பாருங்கள்! தெரியும், மெகா கூட்டணி என்று தாங்களே சொல்லிக் கொள்ள கூடாது. அதை மக்கள் சொல்ல வேண்டும்" என்றார்.

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    கடைசியாக, "வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும். நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்து பேச்சை முடித்தார் கமல். இப்படி அதிமுக, திமுக, பாமக என ஒன்றையும் விடாமல் உள்ளே இறங்கி தூர் வாரி போட்டு விமர்சித்த கமலின் பேச்சை கண்டு நடுங்கி போயுள்ளன மேலும் சில கட்சிகள்!

    English summary
    MNM Leader Kamalhasan slams ADMK, DMK, PMK in Thiruvarur Public Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X