சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தன் நம்பிக்கைகளை.. பிறர் மேல் திணிக்காமல்.. காயப்படுத்தாமல்.. கமல் "பளிச்" அறிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இறை நம்பிக்கை மற்றும் கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். தனது ஸ்டைலில் புரிந்தும், புரியாதது போலவும் உள்ள அந்த டிவீட்டில் அவர் அவரவர் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்காமல் பிறரைக் காயப்படுத்தாமல் இணைந்து வாழும் சமூகம் இது என்று அவர் கூறியுள்ளார்.

Recommended Video

    kandha Sasti Kavasam Issue : Kamal Haasan Statement | Oneindia Tamil

    கந்தசஷ்டி கவசத்தை நிந்திப்பது போல பேசிய வீடியோவால் பெரும் சர்ச்சை வெடித்து இன்று கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நடவடிக்கைக்குள்ளாகியுள்ளது. இதன் எதிரொலியாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக இந்துக் கோவில்கள் சில தாக்கப்பட்டுள்ளன.

    Kamalhaasan comments on Karuppar koottam issue in his style

    மத ரீதியான இந்த மோதல்களால் தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புவோர் வருத்தமடைந்துள்ளனர், கவலை அடைந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் துவேஷமும், வெறுப்பும் தலைவிரித்தாடுகிறது. இதைத்தான் என்று கமல்ஹாசன் ஒரு டிவீட் போட்டு தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

    கமல்ஹாசன் போட்ட டிவீட் இதுதான்:

    "தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது"

    Kamalhaasan comments on Karuppar koottam issue in his style

    அடுத்தவர் நம்பிக்கையை காயப்படுத்தாதீங்க. உங்க நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்காதீங்க. ஒவ்வொருவரும் அடுத்தவரின் நம்பிக்கைகளை அவமதிக்காதீங்க. அப்படி செய்யப்படும் முயற்சிகளால் தமிழர்களின் ஒற்றுமை பாதிக்கப்படும். ஆனால் தமிழர்கள் அதற்கு இடம் தரக் கூடாது, அந்த முயற்சிகள் பலிக்காது என்பதே கமல்ஹாசனின் டிவீட்டின் சாராம்சமாகும்.

    English summary
    MNM leader Kamalhaasan has commented on Karuppar koottam issue in his style in a Tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X