சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா? தனித்துப் போட்டியா?

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மூத்த அரசியல்வாதி பழ கருப்பையாவை சந்தித்து பேசியுள்ளார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை, அவரது இல்லத்துக்குச் சென்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நேற்று (பிப்.26) அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

 பேச்சுவார்த்தை குழு

பேச்சுவார்த்தை குழு

இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. சொல்ல முடியாது.. இந்நேரத்துக்கு கூட தக தகவென எரிந்து கொண்டிருக்கலாம். தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக தங்களது பொதுக்குழு மற்றும் திருச்சி மாநில மாநாட்டை ஒத்தி வைத்துவிட்டது. அதுமட்டுமின்றி, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம், டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்றையும் அறிவித்துவிட்டது. இப்படி மின்னல் வேக பணிகளை திமுக துவக்கிவிட, அதிமுகவும் தங்களது அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

 ஓரணியில் திரள

ஓரணியில் திரள

இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், ஒரு வலிமையான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் என்ட்ரி கொடுப்பதாக அறிவித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி சகாயம், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளை தங்கள் கவசம் இழுக்க மநீம தீவிரமாக பணியாற்றி வருகிறது. தங்கள் கொள்கையுடன் குறைந்தபட்ச அளவுக்கு ஒத்துப்போகும் கட்சிகளை எப்படியாவது ஓரணியில் சேர்த்துவிட வேண்டும் என்று கமல் தீவிரமாக உள்ளார்.

கோரிக்கை

கோரிக்கை

சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற சகாயம் ஐஏஎஸ் அரசியல் வருகை அழைப்பு நிகழ்வில் கூட, ஒத்துப் போனால் கமல்ஹாசனுடன் கூட கூட்டணி வைக்கலாம் என்று அவரது கட்சி நிர்வாகிகள் மேடையிலேயே பகிரங்கமாக கோரிக்கை வைத்தனர்.

 கமலுடன் கைக்கோர்க்க வேண்டும்

கமலுடன் கைக்கோர்க்க வேண்டும்

அதேபோல், மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்.எல். ஏ.வுமான பழ.கருப்பையா, "தமிழகத்தில் மாற்று அரசியல் நிகழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக பாதையில் மக்கள் நீதி மய்யம் பயணிக்கிறது. இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை மாற்றத்துக்கான கமல்ஹாசனுடன் கை கோர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

 திமுக கூட்டணி

திமுக கூட்டணி

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டவை அல்ல. எனவே அந்த கட்சிகள் நிச்சயம் தமிழக அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதற்கான நேரம் இந்த தேர்தலில் அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார். இவர் கூறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தற்போது வரை திமுக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 தனித்து போட்டியா?

தனித்து போட்டியா?

இந்நிலையில், பழ.கருப்பையாவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று (பிப்.26) அவரது வீட்டில் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது கூட்டணி குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், 3-வது கட்ட தேர்தல் பரப்புரைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய கமல்ஹாசன், தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

English summary
kamalhaasan met pala karuppiah in his house tn assembly election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X