சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களால்.. பெண்களுக்காக.. பெண்களுக்கென்று - மக்கள் நீதி மய்யத்தின் 7 செயல் திட்டங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பெண்கள் நல்வாழ்வுக்கான 7 செயல் திட்டங்களை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.

Recommended Video

    #TNElection2021 பெண்கள் வாழ்க்கை தரம்.. பல்வேறு திட்டங்கள்: தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்!

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று (மார்ச்.3) முதல் மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. ஆலந்தூரில் தனது பிரச்சாரத்தை துவக்கிய கமல்ஹாசன், சென்னையில் பல்வேறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கடந்த பிப்ரவரி 27 அன்று, மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அதேபோல் சட்டப்பஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தது. இந்த சூழலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே இன்று கூட்டணியை உறுதி செய்ய, அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜும் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர்க்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    Kamalhaasans Makkal Needhi Maiam has released 7 action plans for the welfare of women

    இந்நிலையில், பெண்கள் நல்வாழ்வுக்கான 7 செயல் திட்டங்களை மக்கள் நீதி மய்யம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில்,

    சீருடைப் பணியில் 50% பெண்கள்:

    அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத் துறையிலும் 50% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.

    துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு பாராட்டு:

    துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கென்றே அவசரகால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவதுடன், 181 பெண்கள் உதவி எண்ணில் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.

    பெண்களுக்கான தயாரிப்புகளின் பொது விநியோகம்:

    பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசாங்கமே கொள்முதல் செய்து, கிராமம் மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்கள் மற்றும் இளம்பருவ பெண் குழந்தைகளுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும்.

    பெண்களுக்கான மாவட்ட அளவிலான மகளிர் வங்கி:

    பெண்களால்.. பெண்களுக்காக.. பெண்களுக்கென்று.. இயங்கும் மகளிர் வங்கி உருவாக்கப்படும்.

    ஒற்றை தாய்மார்களுக்கான ஆதரவின் குடை:

    கல்வி, வேலை, திறன் மேம்பாடு மற்றும் சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு வழங்க்கப்படுவது உறுதி செய்யப்படும்.

    சிறப்பு பராமரிப்பு கட்டமைப்புகள்:

    அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவதை உறுதி செய்தல் (பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் போன்றவை)

    இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைகள்:

    ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறையாவது அனைத்து பெண்களுக்கும் இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும்

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Makkal Needhi Maiam welfare of women
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X