சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 உசுருக்கு ஒரு மணி நேரம்கூட கமல் செலவு பண்ண மாட்டாராமா.. கஸ்தூரி கேட்ட கேள்வி.. கொந்தளித்த மய்யம்

Google Oneindia Tamil News

சென்னை: "3 உசுருக்கு ஒரு மணி நேரம்கூட கமல் செலவு பண்ண மாட்டாராமா" என்று நடிகை கஸ்தூரி கேட்ட கேள்வியினால் கொந்தளித்து போய் உள்ளனர் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள்!

Recommended Video

    Indian 2 shooting incident: Kamal haasan Pressmeet

    ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, திடீரென விபத்து நடந்தது.. அங்கிருந்த கிரேன் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை இப்போதும் பெற்று வருகின்றனர்.

    மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரி நாகஜோதி தலைமையில் இதுபற்றின முழு விசாரணையும் நடக்கிறது.. இதுகுறித்து டைரக்டர் ஷங்கரை நேரில் வரவைத்து விசாரித்தனர்.. 2 மணி நேரங்களுக்கு மேல் இந்த விசாரணை நடந்திருக்கிறது.. இதற்கு பிறகு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.

    கேள்விகள்

    கேள்விகள்

    அவரிடமும் இதேபோல் 2 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை நடைபெற்றது. அப்போது, விபத்து எப்படி நடந்தது, சம்பவத்தின்போது கமல் எங்கே நின்றிருந்தார்.. யாரெல்லாம் ஷூட்டிங்கில் இருந்தார்கள் என்பன போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்துக்கும் அமைதியான உரிய பதிலை கமல் தந்தார்.

    கொந்தளிப்பு

    கொந்தளிப்பு

    ஆனால் நேற்று இந்த விவகாரம் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டதற்கு காரணம் கமலை நடத்திய விதம்தான் என்று மய்ய உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.. விசாரணைக்கு வந்தபோது அந்த ஆபீஸ் எந்த தளத்தில் இயங்குகிறது என்று தெரியகாணோம்.. மேலும் கமலை அழைத்து செல்லவும், பிஆர்ஓ கூட இல்லை என்கிறார்கள் கட்சியினர்... கமல் காரில் இருந்து இறங்கும்போதே தள்ளுமுள்ளுகள் நடந்துள்ளது.... சரியான போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும், தொண்டர்கள்தான் கமலை பாதுகாப்பாக அரவணைத்து ஆபீசுக்குள் அழைத்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

    காலில் ஆபரேஷன்

    காலில் ஆபரேஷன்

    2வது மாடியில் விசாரணை என்பதால் லிப்ட்-க்காக 5 நிமிடம் கமல் காத்திருந்ததாக சொல்கிறார்கள்.. ஆனால் "எங்க தலைவருக்கு விஐபி ட்ரீட்மென்ட் வேண்டாம், ஆபீஸ் எங்கே இருக்கிறது, யாரை பார்க்க வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்று சொல்லகூட ஆள் இல்லை, பத்திரிகையாளர்கள்தான் உதவினார்கள், காலில் அவருக்கு ஆபரேஷன் நடந்திருக்கிறது.. இப்படி நிற்க வைத்துவிட்டதுதான் வேதனையாக உள்ளது" என்றார்கள்.

    காழ்ப்புணர்ச்சி

    காழ்ப்புணர்ச்சி

    இதை ஸ்ரீபிரியா ஒரு அறிக்கை மூலமாகவே வெளிப்படுத்தினார்.. "இப்படி ஒரு நடிகரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.. இது இந்தியன்-2 கதாநாயகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.. மக்கள் நீதி மையம் கட்சியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும்.. பல விபத்துக்களை, பல உயிரிழப்புகளை தமிழ் திரையுலகம் சந்தித்திருந்த போதும், இதுவரை எந்த ஒரு நிலையிலும் அந்த படத்தின் நாயகனை அழைத்து விசாரணை நடத்தியதில்லை. இது சட்ட ரீதியான அணுகுமுறையென்று தோன்றவில்லை, அரசியல் காழ்ப்புணர்ச்சியே" என்றார்.

    நடிகை கஸ்தூரி

    நடிகை கஸ்தூரி

    ஸ்ரீபிரியாவின் இந்த அறிக்கையைதான் நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.. "3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும்" என்று ட்வீட் போட்டார்.

    பதிவு டெலிட் செய்தார்

    உடனே மய்ய உறுப்பினர்கள் ஆவேசமாகி விட்டனர்.. "அவர் விசாரணைக்கு வரமாட்டேனு சொல்லல.. வந்தாரு.. ஆனா அங்கு நடத்தப்பட்ட விதத்தை தான் கண்டிக்கிறோம்" என்று கஸ்தூரி ட்வீட்டுக்கு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதே கருத்தை கஸ்தூரி ஃபேஸ்புக் பதிவிலும் போட்டிருந்தார்.. ஆனால் என்னன்னு தெரியல... அந்த லிங்க்கை டெலிட் செய்துவிட்டார்.!

    English summary
    actress kasturi criticized sripriyas statement and questioned about mnm leader kamalhasan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X