சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்

நாளை மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட போவதாக கமல் தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: நாளை மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட போவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே ஆளும் தரப்பு மீது அதிருப்தியில் உள்ளவர் கமல்ஹாசன். இவரது பெரும்பாலான ட்விட்டர் பதிவுகள், பேட்டிகள் என எல்லாமே அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தே இருக்கும்.

    ஆனால் இப்போது கொடநாடு மர்ம மரணம், மற்றும் கொள்ளை சம்பவம் 2 நாட்களாக பற்றி எரிகிறது. இதற்கு உரிய விளக்கத்தை தருமாறு பிரதான கட்சிகள் ஆளும் தரப்பை நிர்ப்பந்தித்து வரும்நிலையில், கமல்ஹாசனும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

    பதவி விலக வேண்டும்

    பதவி விலக வேண்டும்

    சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல், கொடநாடு சம்பவம் ஒரு மர்மதொடர் கதையின் அடுத்த கட்டம் என்று விமர்சித்துள்ளார். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தான் முன்பிருந்தே கூறி வருவதாகவும் கமல் தெரிவித்தார்.

    மக்களுடன் நாளை

    மக்களுடன் நாளை

    முன்னதாக, தமிழக மக்களுக்கு தன்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட கமல், நாளை பொள்ளாச்சி மற்றும் புரவிப்பாளையம் பகுதிகளில் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட போகிறேன் என்று சொன்னார்.

    கலந்துரையாடல்

    கலந்துரையாடல்

    பொள்ளாச்சி மக்களுடன் பண்டிகை கொண்டாடுவதற்காக இன்றே கமல் விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். மக்கள் நீதி மையம் களப்பணியாளர்களுடன் நாளை கமல் கலந்துரையாட போவதாகவும், மக்கள் நீதி மையம் அலுவலகத்தினை மகாலிங்கபுரத்தில் திறந்து வைக்கப்போவதாகவும் அக்கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    தீவிர ஏற்பாடுகள்

    தீவிர ஏற்பாடுகள்

    இதைதவிர, ஆனைமலையில் மக்களை சந்தித்து கமல் பேசுவதுடன், புரவிபாளையத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பொள்ளாச்சியில் பொங்கல் விழா களை கட்ட போவதால், இதற்கான ஏற்பாடுகளில் மய்ய உறுப்பினர்கள் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    English summary
    MNM Leader Kamalhasan says that, will celebrate Pongal Festival with Pollachi People tomorrow
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X