"அந்த" 24 பேர்.. கமலின் குறி யாருக்கு.. "துண்டு சீட்டு" பறந்தது உண்மையா.. பரபரக்கும் களம்..!
சென்னை: கமலின் பிரச்சாரங்கள் பேசுபொருளாக உருவெடுத்துள்ளன.. கமல் எதை மனசில் வைத்து கொண்டு தன் பிரச்சாரங்களில் பேசி வருகிறார்.. அவருக்கு யார் குறி? என்ன நோக்கம் என்ற குழப்பமும் ஏற்பட்டுவருகிறது.
மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை, மிகச்சிறந்த பேச்சாளர்கள் இல்லை.. சீமான் கட்சியில் எல்லாருமே பேசக்கூடியவர்கள் என்றால், கமல் கட்சியில் கமல் தவிர வேறு யாரும் பிரச்சாரத்தில் பேசுவது இல்லை.. அப்படியே கமல் பேசினாலும் அதிமுகவை மட்டுமே குறி வைத்து பேசுவதும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மய்யம் களமிறங்கி உள்ளது.. இதில், இந்திய ஜனநாயக கட்சி, சமக உள்ளிட்ட வேறு ஒருசில அமைப்புகள், நிறுவனங்களும் இணைந்துள்ளன.. கடந்த முறை ஓரளவு வாக்கு வங்கியை பெற்று வைத்துள்ள கமலின் ஓட்டு சதவீதம் இந்த முறையும் எகிறும் என்கிறார்கள். ஆனால், அதேசமயம், திராவிட கட்சிகளின் வாக்குகளை முந்தும் அளவுக்கு வாக்குகள் கமலிடம் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

நகர்ப்புற வாக்கு
அதிலும் நகர்ப்புறங்களில் மட்டுமே கமலின் கட்சி செல்வாக்கு பெற்றிருக்கிறது என்ற பேச்சும் உள்ளது.. கிராம சபை விஷயத்தை கமல் முன்னெடுத்தும், கிராம மாதிரி சபையை கமல் பங்கேற்று நடத்தியும்கூட, கிராமங்களில் மய்யத்திற்கு வாக்குகள் விழவில்லை.. கமலுக்கு ஓட்டுபோட்டவர்கள் பெரும்பாலும் ஓரளவு வசதி படைத்தவர்கள், படித்தவர்கள், குறிப்பாக மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே கணிசமான வாக்குகளை பெற்று தந்துள்ளனர்.

போட்டி
இப்போதும் இதே போன்றே இந்த கட்சிக்கு வாக்குகள் பலம் உள்ளது.. அதனால்தான் கமல் போட்டியிடும் தொகுதியும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது... நகர்ப்புற ஓட்டுக்கள் மய்யத்துக்கு விழுந்தாலும், அவைகள் யாருடைய ஓட்டுக்கள் என்ற கேள்வியும் எழுகிறது.. கமல் யாருடைய ஓட்டுக்களை பிரிக்கிறார்? யாருக்கு எதிரான ஓட்டுக்களை பெறுகிறார் என்ற கணக்கையும் அரசியல் நோக்கர்கள் கணித்து பார்க்கிறார்கள்..

பிரச்சாரம்
எங்கு பிரச்சாரம் செய்தாலும், கமலின் குறி அதிமுகவை நோக்கியே செல்கிறது.. ஊழல் ஆட்சியை அகற்றுவோம் என்ற வாசகத்தையே பெரும்பாலும் சொல்வதாகவும், திமுகவை கமல் ஏன் விமர்சிப்பதில்லை? அந்த கட்சியில் எத்தனையோ பேர் ஊழல் புரிந்தும், அதிலும் கிட்டத்தட்ட 24 பேர் மீது ஊழல் தொடர்பாக கேஸ்கள் கோர்ட்டில் நடந்து வருவது தெரிந்தும், கமல் ஏன் இதுகுறித்து பேசவில்லை? என்பன போன்ற கேள்விகளையும் அரசியல் நோக்கர்கள் எழுப்புகிறார்கள்.

சந்தேகம்
கெஜ்ரிவால் எப்படி பாஜக, காங்கிரஸ் என எதிர்த்தாரோ, அவரது வழிவகை என்று சொல்லி கொள்ளும் கமல், எதற்காக திமுகவின் ஊழல்களையும் பேசாமல் இருக்கிறார்? என்றும் சந்தேகம் எழுகிறது. உண்மையை சொல்லப்போனால், கமல் பிரிப்பது திமுகவின் ஓட்டுக்களைதான்.. இது தெரிந்தும் அதிமுகவை நோக்கியே குறி பார்த்து அம்புவிடுவது ஏன் என்பதை கமல்தான் விளக்க வேண்டும் என்றும் பேச்சு எழுந்து வருகின்றன.. இந்த சூழலில்தான், திமுக-வின் கமல்ஹாசன் விமர்சித்துள்ளது மற்றொரு பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

துண்டு சீட்டு
"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல், தங்களது திட்டத்தை அறிவித்திருக்கிறார் என்றும், இல்லத்தரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று அறிவித்ததை, திமுக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிப்பதாகவும், ஸ்டாலின் எல்லாத்தையும் காப்பி அடிப்பதாகவும், மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று, துண்டு சீட்டாக மாறி வருவதாகவும் கமல் குறை கூறி உள்ளார். இந்த குறைகளை கமலை உளமாற கூறினாரா? அல்லது திமுக மீது விமர்சனங்கள் ஏதும் வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறைப்பதற்காக கூறினாரா? என்பதுதான் தெரியவில்லை.. பார்ப்போம்.