சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய பரங்கிமலையில்.. திடீரென "அவர்" வீட்டுக்குள்ளே போய்.. மொத்த கட்சியையும் அதிர வைத்த கமல்..!

ஆலந்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடக்கூடும் என தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் வியூகங்களும் அதிரடிகளும் நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே இருக்கிறது.. கமலின் இந்த செயல்பாடுகள், பாரம்பரிய கட்சிகளின் புருவத்தையே உயர வைத்தும் வருகிறது...!

கடந்த முறை எம்பி தேர்தலை விட இந்த முறை கமலுக்கு மவுசு கூடி உள்ளது.. சென்ற எம்பி தேர்தலின்போது, கமல்ஹாசன் துவங்கிய உள்ள புது கட்சி பற்றி ஸ்டாலினிடம் கருத்து கேட்டதற்கு, "நான் அரசியல் கட்சிகள் பற்றி பேசறேன்" என்று நோஸ்கட் பதிலை தந்தார். இந்த கோபம் இன்னும் கமலுக்கு இருக்கத்தான் செய்கிறது.

மய்யம் தனியாக 3வது அணி அமைத்துவிட்டால் தங்களுக்கு வாக்குகள் சிதறும் என்று கணக்கு போட்டு திமுக, கமலுடன் மறைமுக பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டுள்ளது.. இதை ஸ்டாலினும் மறுக்கவில்லை... ஆனால், கமல் பிடிகொடுக்காமல் நழுவி வருவதாகவும் தெரிகிறது.

எம்ஜிஆர் சென்ட்டிமென்ட்.. கமல்ஹாசன் கையில் எடுக்கும் எம்ஜிஆர் சென்ட்டிமென்ட்.. கமல்ஹாசன் கையில் எடுக்கும்

திமுக

திமுக

இந்த சமயத்தில்தான் கமல் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சு கிளம்பியது.. மக்கள் நீதி மய்யம் 1.45 லட்சம் வாக்குகளை கடந்த முறை பெற்றிருந்தது.. இதில் மெஜாரிட்டி வாக்குகள் மயிலாப்பூர், வேளச்சேரி, உள்ளிட்ட தொகுதிகளில் கிடைத்திருந்தது.. அதனால், இந்த முறையும் கமல் இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுபோக இந்த தொகுதிகளில் சாதீய ஓட்டுக்களும் அவருக்கு கை கொடுக்கும் என்றும் நம்பப்பட்டது.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

ஆனால், திடீரென பழைய பரங்கிமலையில் போஸ்டர்களை மய்யத்தினர் ஒட்ட ஆரம்பித்தனர்.. இதனால் பரபரப்பு எகிறியது.. எம்ஜிஆர் முதன்முதலாக, 1967, 1971 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, பரங்கிமலை தொகுதியில்தான்.. இந்த பழைய பரங்கிமலை தொகுதிதான் இப்போது ஆலந்தூர் தொகுதி என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் கமல் களமிறங்க போகிறார்.

கேரக்டர்

கேரக்டர்

கடந்த 3 மாத காலமாகவே அதிமுகவைவிட அதிக அளவு எம்ஜிஆர் பெயரை உச்சரித்தது கமல்தான்.. நாளை நமதே என்று தன் திட்டத்துக்கு பெயர் வைத்தபோதுகூட யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.. நாளை நமதே படத்தில் எம்ஜிஆருடன் கமல் ஒரு கேரக்டரில் அப்போது நடிப்பதாக இருந்தது.. எம்ஜிஆரின் தம்பியாக நடிக்க வேண்டி இருந்ததாகவும், ஏதோ ஒரு காரணத்தினால் அந்த படத்தில் அவருடன் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்த படத்தில்தான் நடிக்க முடியவில்லை, மய்யத்தின் திட்டத்துக்கு நாளை நமதே என்றாவது பெயர் இருக்கட்டும் என்று கமலே ஒருமுறை சொல்லி இருந்தார்.

கடுப்பு

கடுப்பு

ஆனால், அதற்கு பிறகு எம்ஜிஆர் செண்டிமெண்டை ஒவ்வொரு பிரச்சாரத்திலும் கையில் எடுத்தார்.. அதிமுக தரப்பே கடுப்பாகி விடும் அளவுக்கு எம்ஜிஆரை பற்றி பேசினார்.. திமுகவின் வாக்குகளைதான் கமல் பிரிக்கக்கூடும் என்று பார்த்தால், எம்ஜிஆரை கையில் எடுத்து, அதிமுகவின் வாக்குகளையும் கமல் சிதறடிக்க முயல்கிறாரோ என்ற ஐயமும் ஏற்பட்டு வருகிறது.

கமல்

கமல்

காலில் ஆபரேஷன் ஆகி தொந்தரவு தந்துவந்த நிலையில், இப்போதுதான் பிரச்சாரத்தை கமல் ஆரம்பித்துள்ளார்.. ஸ்டிரைட்டாக ஆலந்தூரில் உள்ள எம்ஜிஆர் வீட்டிற்கே போய்விட்டார்.. இந்த ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில்தான் எம்ஜிஆரின் ராமாவரம் வீடு இருக்கிறது. அங்கிருந்தே பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளது, அதிமுகவுக்கு ஷாக்கை தந்து வருகிறது.

சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

எப்படியும் இந்த தொகுதியும் கமலுக்கு கை கொடுக்கும் என்றே தெரிகிறது.. ஏனெனில், எம்பி தேர்தலில் இதே ஆலந்தூரில் 22,379 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது... இப்போது கூடுதலாக எம்ஜிஆரின் செல்ல பிள்ளை, எம்ஜிஆரின் நீட்சி நான் என்ற வாசகத்தை முன்னெடுத்து வருவதால், ஓட்டு வங்கியும் பலப்பெறும், சென்ட்டிமென்ட்டும் ஒர்க் அவுட் ஆகும் என்று நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!

English summary
Kamalhasan will contest in Alanthur Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X