சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கவனிச்சீங்களா.. கமலின் பிரச்சாரத்தில் "இந்த" விஷயத்தை.. பயங்கரமான ஆளா இருக்காரே!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக, திமுகவுக்கு இணையாக மநீம பிரச்சார கூட்டங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. அதற்கு காரணம், கமலின் ஒருசில அறிவிப்புகளும், நூதனமான திட்டங்களும்தான்..!

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய 4வது கட்ட பிரச்சாத்தை தொடங்கிவிட்டார்.. கமலின் பிரச்சாரத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் பார்க்க முடிகிறது.. அதேசமயம் விமர்சனங்களுக்கும் பஞ்சம் இல்லாமல் கமலின் பிரச்சார தாக்கம் அமைந்து வருகிறது.

இதுவரை கமலின் பிரச்சாரங்களில் 2 விஷயங்கள் இன்னும் விவாதத்துக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன.. ஒன்று, கமல் அறிவித்திருக்கும் 7 திட்டங்கள்..

இனிதான் சிக்கலே.. அதிரடி லிஸ்ட்டை கையில் எடுத்த பாஜக.. மிரண்டு போன அதிமுக.. என்னாகும்? இனிதான் சிக்கலே.. அதிரடி லிஸ்ட்டை கையில் எடுத்த பாஜக.. மிரண்டு போன அதிமுக.. என்னாகும்?

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

இந்த 7 திட்டங்களை மேலோட்டமாக பார்த்தால், வழக்கமான தேர்தல் சமயத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாவதும், அவைகள் அந்தந்த கட்சி தலைவர்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதும் இயல்பான ஒன்றுதான்.. இருந்தாலும் கமல் சொல்வது சாதாரணமாக எடுத்து கொண்டு கடந்து விட முடியாது.

இன்டர்நெட்

இன்டர்நெட்

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவது, தற்சார்பு கிராமங்கள் உருவாக்குவது, காகிதங்களே இல்லாமல் அனைத்தும் கணினிமயமாக்கப்படுவது அதாவது துரித நிர்வாகத் திட்டம், சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரும் திட்டம், எல்லா வீடுகளுக்கும் மிக அதிவேக இன்டர்நெட் இணைப்புடன்கூடிய கணினி வசதி திட்டம், பசுமைப் புரட்சித் திட்டம், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கும் திட்டம் என்பன உட்பட 7 அம்சத் திட்டங்கள்தான் அவை.

செலவாகும்

செலவாகும்

இதில் சில நவீனமயமானது.. சில திட்டங்களை நாம் ஏற்கனவே செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்.. சில திட்டங்களை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்களும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. குறிப்பாக பேப்பர் இல்லா அரசு அலுவலகங்கள் என்பது புதிதான அறிவிப்பு.. அதேசமயம், கமலின் இந்த திட்டங்கள் எல்லாம் அதிகமாக செலவாகும் திட்டங்களாகவே இருப்பதாகவும், அரசுக்கு வரவுகளை பற்றி எதுவுமே சொல்லாமல் வெறும் செலவுகளை ஏற்படுத்தும் அறிவிப்புகளாகவே கமல் சொல்லி வருவதாக விமர்சனம் எழுகிறது.

சந்தர்ப்பவாத அரசியல்

சந்தர்ப்பவாத அரசியல்

மேலும், இவ்வளவு காலமாக இல்லாமல், திடுதிப்பென்று தேர்தல் நேரத்தில் வந்து எம்ஜிஆர் ஆட்சி என்கிறார், திராவிட கட்சி என்கிறாரே, இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல்தானே என்றும் அடுத்த விமர்சனம் எழாமல் இல்லை. எவ்வளவுதான் கமலின் பிரச்சாரங்கள் விமர்சிக்கப்பட்டாலும், ஒரு விஷயத்தில் பாராட்டையும் பெற்று வருகிறார்.. அதாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமியாகட்டும், திமுக தலைவர் ஸ்டாலினாகட்டும், தங்கள் பிரச்சாரங்களில் ஒருவரை ஒருவர் வார்த்தை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகரீக போக்கு

நாகரீக போக்கு

குடும்ப கட்சி, வாரிசு அரசியல், ஊழல் கட்சி, பொய்கள், பித்தலாட்டங்கள், நடிப்பு, நாடகம் என்றெல்லாம் பிரதான திராவிட கட்சிகள் ஒருவரையொருவர் தூற்றி கொள்ளும்போது, கமல் நாகரீக பிரச்சாரத்தை மேற்கொள்வதையும் கவனிக்க முடிகிறது. யாரையும் திட்டுவதில்லை, தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை, தரக்குறைவாக ஏசுவதில்லை, அப்படியே விமர்சித்தாலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கமலின் நெடி இருப்பதாக கருதுகிறார்கள்.. பழிபோடுவது எங்கள் நோக்கமில்லை, வழிவகுத்து செல்வதே எங்கள் நோக்கம் என்ற கமலின் அணுகுமுறை முதிர்ச்சியானதாகவே பார்க்கப்படுகிறது.

English summary
Kamalhasans campaign against AIADMK and BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X