சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வளைந்து கொடுக்காவிட்டால் பழி சுமத்துவதா...? சூரப்பா நேர்மையானவர்... கமல் சர்டிஃபிகேட்..!

Google Oneindia Tamil News

சென்னை: கரைவேட்டிகளுக்கு வளைந்து கொடுக்காவிட்டால் நேர்மையாக இருக்கும் ஒருவர் மீது பழி சுமத்துவதா என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

காசுகொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் மதிப்பெண்கள் கொடுத்து மாணவர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என எண்ணுகிறார்கள் என கமல் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;

''அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா என்ற கேள்வியை நாம்தான் எழுப்பினோம்''.

Kamalhassan support Anna university Vc Surappa

''அந்த கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது அதில் மாற்றம் இல்லை, ஆனால் வந்தவரோ வளைந்துக்கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்துக்குழையாதவர்''.

''தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தவேண்டும் என முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள், வளைந்துக் கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம்''.

''எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள்.
மொட்டையில் முடிவளராததால், மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என கடைப்போட்டு காத்திருக்கிறார்கள்''.

''முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா? உயர் கல்வித்துறை அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுத்தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி ஜூனியர் விகடன் இதழில் குற்றம் சாட்டினாரே விசாரித்துவிட்டீர்களா?''

திமுக போராட்டம்... தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட கட்சியினர்... களத்தில் குதித்த மாவட்டச் செயலாளர்..!திமுக போராட்டம்... தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட கட்சியினர்... களத்தில் குதித்த மாவட்டச் செயலாளர்..!

''உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனைத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா?''

''தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை, கரைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன். இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வாங்கப் பார்க்கிறார்களா. சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம்.''

''ஆனால் ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், கமல்ஹாசன் ஆகிய நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதிமய்யம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிகளுக்குமான பிரச்சினை இல்லை.''

''நேர்மையாளர்களுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தைச் சிதைப்போம் என்பதை சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை.''

''சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகளே இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன?

''இதை இனிமேலும் தொடர விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாக விடக்கூடாது.நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்பவர்கள் தங்கள் மவுனம் கலைத்து பேசியே ஆகவேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாறவேண்டும்.''

''நேர்மைதான் நம் ஒரே சொத்து அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஒட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும் நாளை நமதே ஜெய்ஹிந்த்".

English summary
Kamalhassan support Anna university Vc Surappa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X